news by----(செ.துஜியந்தன்)
இன்று (19) திங்கட்கிழமை மதியம் பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதியில்
11வயதுச் சிறுமி மீது துஸ்பிரயோகம் செய்ய முயன்ற நபர் பிரதேச மக்களால்
பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.
பிறப்பிலிருந்து கால் ஊனமுற்ற நிலையில் இருந்த குறித்த 11 வயதுச்
சிறுமியின் தாய் மதிய உணவு சமைப்பதற்காக அருகிலுள்ள கடையொன்றுக்கு பொருட்கள் கொள்வனவு செய்யச் சென்றுள்ளார்.
இந்நிலையில் சாய்ந்தமருதைச் சேர்ந்த தற்போது மருதமுனையில் வசிக்கும் நபர்வீட்டிற்குள் நுழைந்து சிறுமியை துஸ்பிரயோகம் செய்வதற்க்கு
முயன்றுள்ளதுடன் நிர்வாணமாக நின்றுள்ளார்.
இதனை எதிர்பாரத சிறுமி சத்தம்போட்டு கத்தியுள்ளார். சிறுமியின் சத்தம் கேட்டு அயலிலுள்ளவர்கள்
ஒடிவந்துள்ளனர். பொதுமக்களிடம் இருந்து தப்புவதற்கு முயன்ற ஆசாமியை
சுற்றிவளைத்து பிடித்த மக்கள் அருகிலுள்ள முருகன் ஆலயத்தின் ஆலமரத்தில்கட்டிவைத்து நையப்புடைத்துள்ளனர்.
பின்னர் இவ்விடயம் பற்றி கல்முனை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதுடன், சிறுமியை துஸ்பிரயோகத்திற்குட்படுத்த முயன்ற நபரை பொதுமக்களிடம் இருந்து பொலிஸார் மீட்டுச் சென்றனர்.
சமீபகாலமாக தமிழ்ப் பிரதேசங்களில் தனிமையில்இருக்கும் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது இவ்வாறான சம்பவங்கள் மாற்று இனத்தவர்களினால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

haran
No comments:
Post a Comment