Saturday, 17 February 2018

தங்கச்சங்கிலியை திருடிசென்ற இளைஞர்கள் மடக்கிப்பிடித்து நையபுடைப்பு

haran
 கொக்கட்டிச்சோலையில்   பெண்ணொருவரின் தங்கச்சங்கிலியை திருடிசென்ற  இளைஞர்கள் இருவரை  அங்கிருந்த  இளைஞர்கள் மடக்கிப்பிடித்து நையடைப்பு செய்த சம்பவம் இன்று (17) சனிக்கிழமை   இடம்பெற்றுள்ளது.


சிறு வியாபாரம் செய்துவரும் பெண்ணொருவரின் வியாபார நிலையத்திற்கு  சென்று  பொருட்கள் வாங்குவது போன்று நடித்து, குறித்த பெண்ணின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை அறுத்தெடுத்து அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்ற வேளை அப் பிரதேச மக்கள் பிடித்துள்ளனர்

பிடிபட்டவர்கள் தற்போது பொலிஸாரிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளன . இது தொடர்பில் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர் 

No comments: