(-க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்றி பிரதேச சபையின் நேரடியான கண்காணிப்பில் செயற்படும் துறைநீலாவணை பொதுநூலகத்திற்கு நிரந்தரமான நூலகர் ஒருவரை இரண்டு வாரங்களுக்குள் நியமித்து தருமாறு பொதுமக்கள்,வாசகர்கள் கோரிக்கை விடுக்கின்றார்கள்.

இங்கு தினசரி,வாராந்த பத்திரிகைகள் உட்பட பதினைந்தும்,4060 நூல்களுடனும் நூலகத்தரப்படுத்தலுடன் முதனிலையில் காணப்படும் துறைநீலாவணை பொதுநூலகத்திற்கு, நியமிக்கப்படும் நூலகர்கள் குறுகிய காலத்திற்குள் கடமையாற்றிவிட்டு ஏனோதானோ என்றவகையில் இந்நூலகத்தை விட்டிட்டு வேறு நூலகங்களுக்கு துணிச்சலுடனும்,உயர் அதிகாரிகளின் செல்வாக்கிலும் இடம்மாற்றம் பெற்றுச்செல்கின்றார்கள்.
இடமாற்றம் பெற்று செல்லும் இச்செயற்பாடு காரணமாக துறைநீலாவணை பொதுநூலகம் செயலிழந்து காணப்படுகின்றது.தற்போது நூலக கண்காணிப்பாளரின் மூலம் நாளாந்தம் பத்திரிகை பகுதிமட்டும்தான் இயங்கின்றது.துறைநீலாவணையில் 10000 மேற்பட்ட பொதுமக்களும்,1500 மாணவர்களும் முழுமையாக பயன்படுத்தும் நூலகத்தில் நூலகர் இல்லாதால் நூல்களின் இரவல் பகுதியும்,வாசிப்பையும் அனுபவிக்க முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு துறைநீலாவணையில் உள்ள மாணவர்களும்,வாசகர்களும் தள்ளப்பட்டுள்ளார்கள்.
தாயில்லாமல் காணப்படும் துறைநீலாவணை பொதுநூலகாத்திற்கு நிரந்தர நூலகரை நியமிப்பதற்கு கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர்,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்,பிராந்திய உள்ளுராட்சி ஆணையாளர்,களுதாவளை பிரதேச சபைச்செயலாளர் இரண்டு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அவ்வாறு நடவடிக்கை எடுக்காத விடயத்தில் துறைநீலாவணை பொதுநூலகம் சம்பந்தமாக ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்படும்

haran
No comments:
Post a Comment