Monday, 4 April 2016

விற்பனை நிலையங்களில் கொள்ளை

அம்பாறை, அக்கரைப்பற்றுப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்றுப்  பிரதேசத்திலுள்ள  ஏழு விற்பனை நிலையங்களின் பூட்டுகள் ஞாயிற்றுக்கிழமை (03) இரவு உடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் அவ் விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.


 மேற்படி விற்பனை நிலையங்களை  உடைத்துக்கொண்டு உள்நுழைந்த திருடர்கள், இரண்டு வர்த்தக நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த பணத்தை மாத்திரமே திருடிச் சென்றுள்ளனர்.

 உழவு இயந்திர உதிரிப்பாக விற்பனை நிலையத்திலிருந்து ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவும் சீமெந்து உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யும் நிலையத்திலிருந்து 25 ஆயிரம் ரூபாவும் திருடப்பட்டுள்ளதாக தம்மிடம் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  


 உழவு இயந்திர உதிரிப்பாக விற்பனை நிலையம், 
சீமெந்து உள்ளிட்டவை விற்பனை செய்யும் நிலையம், மின்கலங்கள் விற்பனை செய்யும் நிலையம்,
 முளை நெல் விற்பனை நிலைங்கள் இரண்டு, 
பலசரக்குக்கடை, 
பீடைநாசினி விற்பனை நிலையம் ஆகியவையே உடைக்கப்பட்டுள்ளன. 



  இந்தச் சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்றுப்  பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

No comments: