Tuesday, 5 April 2016

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் ஒருர் கைது

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் துறைமுகத்துக்கு முன்னால் உள்ள வீதியில் வைத்து நேற்று(05) தீர்வை செலுத்தாமல் நாட்டுக்கள் கொண்டு வரப்பட்ட டொப் மவுண்டன் என்ற பெயருடைய 100
சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக  அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபரை சோதனை செய்தபோது அவரது உடமையில் இருந்து சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அதனையடுத்து, குறித்த நபரை கைது செய்ததாகவும் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படு வருவதாகவும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்

No comments: