Thursday, 28 April 2016

ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராமின் நினைவுதினம்

  மறைந்த ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராமின் (தராகி) 11ஆவது ஞாபகார்த்த நினைவுதினம், சனிக்கிழமை (30) பிற்பகல் மூன்று மணிக்கு  அக்கரைப்பற்று கலாச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

 அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினதும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தினதும் ஏற்பாட்டில் இந்த நினைவுதினம் நடைபெறவுள்ளது. 

இதன்போது, 'சிவராமின் பார்வையில்... எமது ஊடகமும் அரசியலும் நிரப்பப்பட வேண்டிய இடைவெளி' என்ற தலைப்பில் மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் கல்வியியலாளர் கலாநிதி எம்.பி.ரவிச்சந்திரா உரையாற்றவுள்ளார். 

இந்த நிகழ்வில் ஊடக நண்பர்கள்,  அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவூள்ளனர். 

சிவராம் கடந்த 2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டியில் கடத்திச் செல்லப்பட்டு புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு அருகில் மறுநாள் சடலமாக மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது 

No comments: