திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பட்டை பகுதியில் (25) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில்
அனுமதிக்கப்படிருந்த நிலையில் இன்று (27) உயிரிழந்தார்
ஆலையடிவேம்பு பனங்காட்டு பகுதியினை சேர்ந்த ரவீந்திரன் விஜயபிரபாகர் 24வயது இளைஞனே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார்
திருக்கோவில் பிரதேசத்தில் இருந்து அக்கரைப்பற்றை நோக்கி வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
No comments:
Post a Comment