Thursday, 28 April 2016

வாள்வெட்டுச் சம்பவம் சந்தேக நபர்கள் கைது

அக்கரைப்பற்று -பொத்துவில் வீதியிலுள்ள கோவிலுக்கு அருகில் இரண்டு இளைஞர் குழுக்களுக்கு இடையில் ஞாயிற்றுக்கிழமை (24) இரவு இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம்; தொடர்பில்  மேலும் ஐந்து பேரை இன்று வியாழக்கிழமை காலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

 ஆலையடிவேம்பு, தீவுக்காலைப் பிரதேசத்தைச் இந்தச் சந்தேக நபர்கள் தலைமறைவாகியிருந்த போதே கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி இளைஞர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் வாச்சிக்கடாவைச் சேர்ந்த ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.    இந்த வாள்வெட்டை மேற்கொண்டதாகக் கூறப்படும் ஏழு பேர் தலைமறைவாகியிருந்தனர். இவர்களில் இரண்டு பேர் திங்கட்கிழமை (25) இரவு கைதுசெய்யப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் 20 வயது முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர் எனவும் பொலிஸார் கூறினர்.   இந்த ஐந்து சந்தேக நபர்களை நாளை வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் கூறினர்.   - See more at: http://www.tamilmirror.lk/170892#sthash.SZBU60em.dpuf

No comments: