Tuesday, 26 April 2016

விபத்தில் இளைஞன் படுகாயம்


திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பட்டை முன்வளைவில் நேற்று(25) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பனங்காட்டு கிராமத்தை சேர்ந்த 24வயதுடடைய ஆர்.விஜயபிரபாகரன் எனும் இளைஞனே இவ்வாறு விபத்துக்குள்ளானவர் என திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.

திருக்கோவில் பிரதேசத்தில் இருந்து அக்கரைப்பற்றை நோக்கி வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

விபதத்துக்குள்ளான இளைஞன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதானா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு ஆபத்தான நிலையில் மீண்டும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

வெளிநாடொன்றில் தொழில் புரிந்து வந்த இவர் கடந்த இரு மாதத்திற்கு முன்பே நாட்டிற்கு வருகை தந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

No comments: