புதையல் எடுப்பதற்காக பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன் மூவர் அக்கரைப்பற்று பொலிசாரால் இன்று(01) கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து விரைந்த பொலிசார் குறித்த பொருட்களுடன் வந்த சந்தேக நபர்களை மிகவும் புத்தி சாதுர்யமான முறையில்
ஆலையடிவேம்பு பிரதான சந்தியில் மடக்கிப்பிடித்து சோதனை இட்ட வேளையிலேயே சந்தேக நபர்கள் அகப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அக்கரைப்பற்று சரணபாலபுரம், உடவளவ, தெகியத்தகண்டி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.
.இவர்களிடமிருந்து புதையல் எடுக்க பயன்படுத்தும் பொருட்கள் என சந்தேகிக்கப்படும் மாந்திரிக எண்ணை மற்றும் நீர் நூல்கள் என்பவற்றுடன் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment