Tuesday, 20 October 2015

தொற்றா நோய்களிலிருந்து பாதுகாத்தல்

நௌஷாத்......

அம்பாறை மாவட்ட அரசார்பற்ற அமைப்புக்களின் இணையம் மற்றும் ஆலையடிவேம்பு 

சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துடன் இணைந்து தொற்றா நோய்களிலிருந்து 

பாதுகாத்தல் மற்றும் உணவுப்பாதுகாப்பும் போசனையும் என்ற தலைப்பிலான பயிற்சிச் 

செயலமர்வு ஆலயைடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி ஜனாப் : ஏ.எம்.முனவ்வர் 

அவர்களின் வழிகாட்டலுடன் இடம்பெற்றது. 


இதன்போது தற்காலத்தில் எவ்வாறான தொற்றா நோய்கள் காணப்படுகின்றது. அவற்றிலிருந்து 

எவ்வாறு எம்மை பாதுகாக்கலாம், போசாக்கு குறைபாடுகள் என்ன? போசனைப் பதார்த்தங்கள் 

என்ன? கர்ப்பினித் தாய்மார்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்ன? உணவை எவ்வாறு 

பாதுகாக்க முடியும்,? எவ்வாறான உணவை உட்கொண்டால் நோயிலிருந்து 

பாதுகாக்கப்படலாம்? தேவையற்ற உடல் நிறையை குறைப்பது எவ்வாறு? உடல்நிலையில் 

சமநிலையை பேணுவது எவ்வாறு? என பல்வேறு கட்டங்களில் இப்பயிற்சி செயலமர்வு இடம்பெற்றது. 

இதன்போது இணையத்தின் அங்கத்துவ அமைப்புக்களின் நிறுவனப்பிரதிநிதிகள் , கள 



உத்தியோகத்தர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டு பயன்பெற்றதுடன் 

வளவாளரினால் மக்களுக்கு இது தொடர்பில் நிலைய விடயங்கள் அறியாமல் 

செயற்படுகின்றனர். ஆகவே இப்பயிற்சியில் கலந்து கொண்ட அனைவரும் இவ்விடயங்களை 

மக்களுக்கு தெளிவு படுத்தி அவர்களுடைய வாழ்க்கையின் வளர்ச்சிக்கு பங்காற்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்று தெரிவித்தார்.

No comments: