(பத்மராஸ் கதிர்)
24.10.2015 (சனிக்கிழமை) அன்று, கண்டி திரித்துவக் கல்லூரி மண்டபத்தில், மாபெரும் இலக்கியப் பரிசுப்போட்டி பரிசளிப்பு, கலை விழா, சிறப்பு மலர் வெளியீடு என்பன பேராசிரியர் தை.தனராஜ் (பீடாதிபதி, கல்விப்பீடம், மாலபே) அவர்கள் தலைமையில், மாண்புமிகு பி. பி. தேவராஜ் (முன்னாள் இந்து கலாசார இராஜாங்க அமைச்சர்), சேவாஜோதி எஸ். முத்தையா ஜே.பி (இலக்கிய ஆர்வலர், தொழிலதிபர் லக்கிலேண்ட்) அவர்கள் முன்னிலையில், நடைபெற்றது.
இன் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ வி.எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கௌரவ சரத் ஏக்கநாயக்க (மத்திய மாகாண கல்வி அமைச்சர்) மாண்புமிகு செல்வி ராதா வெங்கட்ராமன் (உதவி இந்தியத் தூதுவர், கண்டி) புரவலர் காசிம் உமர் அவர்கள் (தொழிலதிபர், புரவலர் புத்தகப் பூங்கா நிறுவனர்) மற்றும் இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து பல பேராசிரியர்கள், கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இதன்போது அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டி - திறந்த மட்டத்தில் தெரிவாகியமையையிட்டு காரைதீவைச் சேர்ந்த செல்வி. க. ஜீவரதி (உதவி விரிவுரையாளர், மொழித்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம்) அவர்கலும் பரிசளித்து கௌரவிக்கப்பட்டார்.
No comments:
Post a Comment