Friday, 2 October 2015

வாராந்த சந்தை முறை ஏற்படுத்தப்படும்


திவிநெகும பயனாளிகளின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்காக எதிர்காலத்தில் வாராந்த சந்தை முறைமை ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.எம்.முசாரத் தெரிவித்தார். பொத்துவில் பிரதேச செயலக திவிநெகும பிரிவின் தலைமையக முகாமையாளர் என்.கிருபாகரன் தலைமையில் நேற்று வியாழக்கிழமை (01) பிரதான பஸ் நிலையத்திற்கு அருகில் நடைபெற்ற 'உற்பத்தி பொருட் கண்காட்சியும் விற்பனையும்' நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 'திவிநெகும பயனாளிகளின் உற்பத்திகளை ஊக்குவிக்கும் அதேவேளைஇ சிறந்த சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தி 

கொடுப்பதும் முக்கியமானதாகும். எனவே தான் இவ்வாறான நிகழ்வுகள் நடைபெறுகின்றன.  இச்சந்தை வாய்ப்பானது உற்பத்தியாளர்களின் உற்பத்தி ஆற்றலை அதிகரிப்பதுடன் வருமானத்தையும் ஈட்டிக் கொடுக்கும்' என்றார்

No comments: