தீர்வையற்ற முறையில் மோட்டார் சைக்கிளுக்காக விண்ணப்பித்த ஊடகவியலாளர்களை நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றுமாறு நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் மேலாதிகச் செயலாளர் பீ.கே.எஸ்.ரவீந்திர கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கான கடிதம் உரியவர்களுக்கு நேற்று(12) தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நேர்முகப் பரீட்சை 19ஆம், 20 ஆம் திகதிகளில் நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சில் நடைபெறவுள்ளது. இந்த நேர்முகப் பரீட்சைக்கு தோற்றுவோர் குறித்த கடிதம், தேசிய அடையாள அட்டை, அரசாங்க தகவல் திணைக்களத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, திணைக்களத் தலைவர் மூலம் வழங்கப்பட்ட சேவைச் சான்றிதழ்,ஆகக் குறைந்தது ஐந்து வருட சேவைக் காலத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் போன்றவற்றை சமாப்பிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்
No comments:
Post a Comment