Tuesday, 13 October 2015

பேஸ்புக் தொடர்பாக, 2,000 முறைப்பாடுகள்...

போலி முகப்புத்தகக் கணக்குகள் தொடர்பாக 80 சதவீதமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கணினி அவசர தயார்நிலை அணியின் பிரதம தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சந்திர குப்தா தெரிவித்துள்ளார். கடந்த ஒன்பது மாதங்களில் பேஸ்புக் தொடர்பாக, 2,000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கணினி அவசர தயார்நிலை அணித் தகவல்கள் தெரிவிக்கின்றன. பேஸ்புக் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில், 011-2691692 என்ற தொலைபேசி இலக்கத்துக்கோ 011-2691064 என்ற தொலைநகல் இலக்கத்துக்கோ முறைப்பாடுகளைச் செய்யமுடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மூலம் முறைப்பாடுகளை செய்வதாயின் உநசவளூஉநசவ.பழஎ.டம. மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments: