Friday, 30 October 2015
Wednesday, 28 October 2015
கண்டி திரித்துவக் கல்லூரியில் இடம் பெற்ற அகிலம் இலக்கியப் பரிசுப்போட்டி, சிறப்பு மலர் வெளியீடு..
(பத்மராஸ் கதிர்)
24.10.2015 (சனிக்கிழமை) அன்று, கண்டி திரித்துவக் கல்லூரி மண்டபத்தில், மாபெரும் இலக்கியப் பரிசுப்போட்டி பரிசளிப்பு, கலை விழா, சிறப்பு மலர் வெளியீடு என்பன பேராசிரியர் தை.தனராஜ் (பீடாதிபதி, கல்விப்பீடம், மாலபே) அவர்கள் தலைமையில், மாண்புமிகு பி. பி. தேவராஜ் (முன்னாள் இந்து கலாசார இராஜாங்க அமைச்சர்), சேவாஜோதி எஸ். முத்தையா ஜே.பி (இலக்கிய ஆர்வலர், தொழிலதிபர் லக்கிலேண்ட்) அவர்கள் முன்னிலையில், நடைபெற்றது.
இன் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ வி.எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கௌரவ சரத் ஏக்கநாயக்க (மத்திய மாகாண கல்வி அமைச்சர்) மாண்புமிகு செல்வி ராதா வெங்கட்ராமன் (உதவி இந்தியத் தூதுவர், கண்டி) புரவலர் காசிம் உமர் அவர்கள் (தொழிலதிபர், புரவலர் புத்தகப் பூங்கா நிறுவனர்) மற்றும் இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து பல பேராசிரியர்கள், கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இதன்போது அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டி - திறந்த மட்டத்தில் தெரிவாகியமையையிட்டு காரைதீவைச் சேர்ந்த செல்வி. க. ஜீவரதி (உதவி விரிவுரையாளர், மொழித்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம்) அவர்கலும் பரிசளித்து கௌரவிக்கப்பட்டார்.
மரநடுகை வேலைத்திட்டங்கள்
பிரேம்....
தேசிய சுற்றாடல் பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இம்மாதம் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களின் ஓரங்கமாக சிரமதானப் பணிகள், விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் மற்றும் மரநடுகை வேலைத்திட்டங்கள் என்பன அக்கரைப்பற்று - 9, ஆலையடிவேம்பு, நாவற்காடு ஆகிய கிராமசேவகர் பிரிவுகளிலும், ஆலையடிவேம்பு உதயம் விளையாட்டுக்கழக மைதானத்திலும் இன்று (23) காலை முன்னெடுக்கப்பட்டன.

முதலில் ஆலையடிவேம்பு உதயம் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்ற மரநடுகை வைபவத்தில் பிரதேச செயலாளரும் விளையாட்டுக்கழக அங்கத்தவர்களும் இணைந்து நீண்டகாலப் பயன்தரும் நிழல் மரங்களை நட்டுவைத்தனர். அதனைத் தொடர்ந்து அக்கரைப்பற்று - 9, ஆலையடிவேம்பு, நாவற்காடு ஆகிய கிராமசேவகர் பிரிவுகளிலும் சிரமதானங்கள் மற்றும் விழிப்புணர்வுக் கருத்தரங்குகளோடு இணைந்தவகையிலான மரநடுகை வைபவங்கள் முன்னெடுக்கப்பட்டன.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட குறித்த வேலைத்திட்டங்களில் பிரதேச செயலகப் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.பாக்கியராஜா, அபிவிருத்தித் திட்ட உதவியாளர் சித்தீக் றஸ்மி, விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.ரிஷந்தன் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோருடன் பிரதேசப் பொதுமக்களும் இணைந்து முன்னெடுத்திருந்தனர்.
குறித்த கிராமசேவகர் பிரிவுகளில் பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்ட சிரமதானங்களோடு ஆரம்பமான வேலைத்திட்டங்களில் பிரதேச செயலாளரும் ஏனைய அதிகாரிகளும் பங்கெடுத்ததுடன், அடுத்து ஒழுங்குசெய்யப்பட்டிருந்த ஒன்றுகூடல்களின்போது நாடு முழுவதும் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் தேசிய சுற்றாடல் பாதுகாப்பு மாத வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும், மரநடுகையின் பொருளாதார, சமுக முக்கியத்துவங்கள் தொடர்பாகவும் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தினர்.
Wednesday, 21 October 2015
Tuesday, 20 October 2015
யானை 20 அடி குழியில் விழுந்துள்ளன...
கார்த்தி
அம்பாறை, திருக்கோவில் வன ஜீவராசி திணைக்களப் பிரிவுக்குட்பட்ட தங்கவேலாயுதபுரம், உடும்பன்குளப் கிராமத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு தாய் யானையும் அதன் குட்டியும் சுமார் 20 அடி குழியில் விழுந்துள்ளன. யானைகள் இரண்டும் பிளிறும் சத்தம் கேட்டு விரைந்து வந்த கிராமவாசிகள் திருக்கோவில் வன ஜீவராசி திணைக்கள அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியதையடுத்து வன ஜீவராசி அதிகாரிகள் இவ்விடத்துக்குச் சென்று யானைகளை குழியில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தங்கவேலாயுதபுரம்,கஞ்சிகுடியாறு பகுதியில் இவ்வாறு சுமார் 20க்கும் மேற்பட்ட பாரிய குழிகள் வெட்டப்பட்டு கிடப்பதாகவும் இதன் காரணமாக கடந்த காலங்களில் யானைகள் பல விழுந்து இவ்வாறு மீட்டுள்ளதாகவும் இவ்வாறான குழிகளால் மிருகங்களுக்கு மட்டுமல்ல இனிவருகின்ற மழைக்காலமாக இருப்பதனால் மனிதர்களுக்கும் உயிராபத்தினை ஏற்படுத்தக் கூடும். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பில் கவனமெடுக்க வேண்டும் என பிரதேசவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொற்றா நோய்களிலிருந்து பாதுகாத்தல்
நௌஷாத்......
அம்பாறை மாவட்ட அரசார்பற்ற அமைப்புக்களின் இணையம் மற்றும் ஆலையடிவேம்பு
சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துடன் இணைந்து தொற்றா நோய்களிலிருந்து
பாதுகாத்தல் மற்றும் உணவுப்பாதுகாப்பும் போசனையும் என்ற தலைப்பிலான பயிற்சிச்
செயலமர்வு ஆலயைடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி ஜனாப் : ஏ.எம்.முனவ்வர்
அவர்களின் வழிகாட்டலுடன் இடம்பெற்றது.
இதன்போது தற்காலத்தில் எவ்வாறான தொற்றா நோய்கள் காணப்படுகின்றது. அவற்றிலிருந்து
எவ்வாறு எம்மை பாதுகாக்கலாம், போசாக்கு குறைபாடுகள் என்ன? போசனைப் பதார்த்தங்கள்
என்ன? கர்ப்பினித் தாய்மார்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்ன? உணவை எவ்வாறு
பாதுகாக்க முடியும்,? எவ்வாறான உணவை உட்கொண்டால் நோயிலிருந்து
பாதுகாக்கப்படலாம்? தேவையற்ற உடல் நிறையை குறைப்பது எவ்வாறு? உடல்நிலையில்
சமநிலையை பேணுவது எவ்வாறு? என பல்வேறு கட்டங்களில் இப்பயிற்சி செயலமர்வு இடம்பெற்றது.
இதன்போது இணையத்தின் அங்கத்துவ அமைப்புக்களின் நிறுவனப்பிரதிநிதிகள் , கள
உத்தியோகத்தர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டு பயன்பெற்றதுடன்
வளவாளரினால் மக்களுக்கு இது தொடர்பில் நிலைய விடயங்கள் அறியாமல்
செயற்படுகின்றனர். ஆகவே இப்பயிற்சியில் கலந்து கொண்ட அனைவரும் இவ்விடயங்களை
மக்களுக்கு தெளிவு படுத்தி அவர்களுடைய வாழ்க்கையின் வளர்ச்சிக்கு பங்காற்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்று தெரிவித்தார்.

பயிர்செய்கைத் திட்டம்
ஏற்றுமதியினை முதன்மையாகக் கொண்ட பயிர்செய்கைத் திட்டம்
ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயாகமகேயின் ஏற்பாட்டில் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினது ஆலோசனைக்கு அமைய உள்நாட்டு ரீதியான நுகர்ச்சி பயிர் செய்கைத் திட்டம் அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலகப்பிரிவில் 300 பயிர் செய்கை குடும்கங்களுக்கான பயிற்சித்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று (18) ஞாயிற்றுக்கிழமை ஜக்கிய தேசியக்கட்சியின் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஜெயாகரின் ஏற்பாட்டில் கலாச்சார மண்டபத்தில் இடம் பெற்றது
இவ் நிகழ்வில் சிறிய வெங்காயம் வெள்ளை எள்ளு பிஞ்சு மிளகாய் போன்றவற்றினை உற்பத்திசெய்தல் பராமரிப்பு முறைகள் உள்நாட்டு வெளிநாட்டு சந்தைவாய்ப்பு தொடர்பில் பிரதேச உற்பத்தியாளர்கள் பயிற்றுவிக்கப்பட்டனர்
இப் பயிற்சி நொறியில் ஆலையடிவேம்பு பிரதேச திவினெகும முகாமைத்துவப் பனிப்பாளர் நேசராஜா உடன் அமைச்சரின் இனைப்பாளர் வினோகாந் பிரதேச சபை செயலாளர் திருமதி கமலநாதன் மற்றும் விவசாய போதனாசிரியரும் கலந்து கொண்ட்டிருந்தனர்
Thursday, 15 October 2015
சேனைக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள்....
சேனைக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான வருடாந்த அலங்கார உற்சவத்தின் இரண்டாம் நாள் திருச்சடங்கான இன்று(14) மாலை 6.00 மணியளவில் அம்மன் அடியவர்களுக்கு அருள்பாலிக்கும் வண்ணம் ஆலயத்திலிருந்து நற்பிட்டிமுனை இரண்டம் குறுக்கு நொக்கி சென்று பின் ஆலயத்தை வந்தடைந்ததும் அங்கு திருச்சடங்கு பூசைகள் இடம்பெற்றன.
இன்நிகழ்வில் நூற்றுக்கனக்கான பக்த அடியார்கள் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகான உள்ளுராட்சி மன்றம்களின் கொத்தனி சுத்திகரிப்பு வேலைத்திட்டம்
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று மானகர சபை மற்றும் ஆலையடிவேம்பு ,அக்கரைப்பற்று பிரதேசசபைகள் ஒன்றினைந்து கிழக்கு மாகான முதலமைச்சரின் ஆலோசனைக்கு அமைவாக உள்ளுராட்சி மன்றம்களின் கொத்தனி சுத்திகரிப்பு வேலைத்திட்டம் ஒன்றினை இன்று 15 வியாழன் முதல் நடைமுறைப்படுத்தி வருகின்றது இதற்கு அமைவாக இன்று அக்கரைப்பற்று நகரினை அண்டிய பொத்துவீல் வீதி சுத்திகரிப்புப்பனிகள் உள்ளுராட்சி மன்றங்களினால் நகரினை அண்டிய பகுதிகலில் இன்று(15)வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
இதில் அக்கரைப்பற்று மானகரசபை ஆனையாளர் ஏ.எல்.எம் அஸ்மி ஆலையடிவேம்பு பிரதேசசபை செயலாளர் திருமதி வி.கமலனாதன் அக்கரைப்பற்று பிரதேசசபை செயலாளர் ஏ.எல்.சலாவூதீன் மற்றும் வைத்திய அதிகாரி எஸ்.எஸ்.ஹம்துனா பொது சுகாதார பரிசோதகர் எஸ்.ஜீவராஜ் உடன் அனைத்து உள்ளுராட்சி சபைகளது உறுப்பினர்களும் கலந்து கொண்டு இச் சுத்திகரிப்புப்பனியினை நடாத்தினர்
இவ் வேலைத்திட்ட மானது நகரினை அண்டிய பகுதிகளில் தொடர்சியாக இன்று 15 வியாழன் முதல் 17 சனிக்கிழமை வரை மூன்று தினம்கள் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்
அம்பாறை மாவட்ட வேலையற்ற தமிழ்ப் பட்டதாரிகளின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு...
அம்பாறை மாவட்ட வேலையற்ற தமிழ்ப் பட்டதாரிகளின் உண்ணாவிரதப் போராட்டம் புதன்கிழமை நிறைவுக்கு வந்துள்ளது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸிர் அஹமட்டுக்கும் வேலையற்ற பட்டதாரிகளின் பிரதிநிதிகளுக்குமான பேச்சுவார்தை கிழக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தைகளின் மூலமே அம்பாறை மாவட்ட வேலையற்ற தமிழ்ப் பட்டதாரிகளின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்போது,கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸூம் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பும் இணைந்து ஆட்சியமைத்திருக்கின்றது. ஆகவே, உங்களுடைய கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாகாண முதலமைச்சர் உறுதியளித்தார்.

Tuesday, 13 October 2015
பேஸ்புக் தொடர்பாக, 2,000 முறைப்பாடுகள்...
போலி முகப்புத்தகக் கணக்குகள் தொடர்பாக 80 சதவீதமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கணினி அவசர தயார்நிலை அணியின் பிரதம தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சந்திர குப்தா தெரிவித்துள்ளார். கடந்த ஒன்பது மாதங்களில் பேஸ்புக் தொடர்பாக, 2,000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கணினி அவசர தயார்நிலை அணித் தகவல்கள் தெரிவிக்கின்றன. பேஸ்புக் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில், 011-2691692 என்ற தொலைபேசி இலக்கத்துக்கோ 011-2691064 என்ற தொலைநகல் இலக்கத்துக்கோ முறைப்பாடுகளைச் செய்யமுடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மூலம் முறைப்பாடுகளை செய்வதாயின் உநசவளூஉநசவ.பழஎ.டம. மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீர்வையற்ற முறையில் மோட்டார் சைக்கிள்...
தீர்வையற்ற முறையில் மோட்டார் சைக்கிளுக்காக விண்ணப்பித்த ஊடகவியலாளர்களை நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றுமாறு நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் மேலாதிகச் செயலாளர் பீ.கே.எஸ்.ரவீந்திர கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கான கடிதம் உரியவர்களுக்கு நேற்று(12) தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நேர்முகப் பரீட்சை 19ஆம், 20 ஆம் திகதிகளில் நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சில் நடைபெறவுள்ளது. இந்த நேர்முகப் பரீட்சைக்கு தோற்றுவோர் குறித்த கடிதம், தேசிய அடையாள அட்டை, அரசாங்க தகவல் திணைக்களத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, திணைக்களத் தலைவர் மூலம் வழங்கப்பட்ட சேவைச் சான்றிதழ்,ஆகக் குறைந்தது ஐந்து வருட சேவைக் காலத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் போன்றவற்றை சமாப்பிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்
Tuesday, 6 October 2015
தரம் -05 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள்
2015ஆம் ஆண்டுக்கான தரம் -05 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk. மேற்படி இணையத்தளங்கள் ஊடாக பார்வையிட முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
015ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் மாவட்ட அடிப்படையிலான வெட்டுப்புள்ளி விவரம் வெளியாகியுள்ளது.
தேசிய சூழல் பாதுகாப்பு மாதத்தினைச் சிறப்பிக்கும்வகையில்
பிரேம்....
இலங்கைத் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஒக்டோபர் மாதம் முழுவதும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தேசிய சூழல் பாதுகாப்பு மாதத்தினைச் சிறப்பிக்கும்வகையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத் திட்டமிடல் பிரிவும் திவிநெகும அபிவிருத்திப் பிரிவும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த உத்தியோகபூர்வ பயன்தரும் பழக்கன்றுகள் விநியோகமும் மரநடுகை வைபவமும் இன்று (05) காலை ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள கோளாவில் - 1, தீவுக்காலை கிராமத்தில் இடம்பெற்றன.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவங்களில் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.பாக்கியராஜா, ஆலையடிவேம்பு பிரதேச திவிநெகும தலைமையக முகாமையாளர் கே.நேசராஜா, கிராம உத்தியோகத்தர் எஸ்.சுமணாரதி, திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் ரி.நந்தகுமார், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.பாமினி, அபிவிருத்தி உதவியாளர் சித்தீக் ரஸ்மி, அக்கரைப்பற்று கிழக்கு பிரதேச விவசாயப் போதனாசிரியர் எம்.கோகுலராஜ் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ.கதாகரன், திருமதி.அகிலராணி திலகராஜா ஆகியோரும் குறித்த கிராமப் பயனாளிகளும் கலந்துகொண்டனர்.
இதன்போது உரையாற்றிய பிரதேச செயலாளர், அரசாங்கம் இப்பயன்தரும் மரக்கன்றுகளைப் பகிர்ந்தளிப்பதன் நோக்கம் குறித்தும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மரநடுகையின் அவசியம் குறித்தும் பேசினார். அடுத்து விவசாயப் போதனாசிரியர் பேசும்போது குறித்த மரக்கன்றுகளைப் பராமரிக்கும் விதங்கள், பசளையிடும் முறைகள் என்பன தொடர்பாக பயனாளிகளுக்குத் தெளிவுபடுத்தினார்.
அடுத்து இடம்பெற்ற மரநடுகை வைபவத்தில் பிரதேச செயலாளரும் பிரதித் திட்டமிடல் பணிப்பாளரும் இணைந்து மரக்கன்றுகளை நட்டுவைத்தனர். அதனைத் தொடர்ந்து அதிதிகள் இணைந்து பயனாளிகளுக்கான மரக்கன்றுகளைப் பகிர்ந்தளிக்கும் வைபவமும் இடம்பெற்றது
Monday, 5 October 2015
பார ஊர்தி விபத்தில் 04 பேர் படுகாயம.....
அக்கரைப்பற்று, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்காடு சிப்பித்திடல் பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை பார ஊர்தியொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தினுள் விழுந்ததில் படுகாயமடைந்த 04 பேர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் சாரதியும் பார ஊர்தியில் பயணித்த 03 சிறுவர்களுமே காயமடைந்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் இன ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும்.... ஆரம்ப கைத்தொழில் அமைச்சர தயாகமகே
அதற்காக ஜாதி மத பேதமின்றி நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இலங்கை மக்கள் எனும் எண்ணத்துடன் பயணிக்க வேண்டும்
என ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளரும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சருமான தயாகமகே தெரிவித்தார்.
ஜக்கிய தேசியக் கட்சியின் அம்பாரை மாவட்ட தமிழ் பிராந்திய செயற்பாட்டுக் குழு தலைமைக் காரியாலய்த்தினை திறந்துவைக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை(04) ஆலையடிவேம்பு செயற்பாட்டுக் குழு செயலாளர் ஜெயாகரின் தலைமையில் இடம் பெற்றது.
ஆலையடிவேம்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அம்பாறை மாவட்ட தழிழ் பிராந்திய செயற்பாட்டு தலைமை காரியாலயத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இலங்கையில் இனி இன,மத வேறுபாட்டுக்கு இடமில்லை. அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்ப முன்வரவேண்டும்.
ஜனவரி 8ஆம் திகதிக்கு பின்னர் நாட்டில் சிறந்ததொரு அரசியல் புரட்சி ஏற்படுத்தப்பட்டது.
இவ்வாறான சிறந்த அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்தியதன் விளைவாக வெளிநாடுகளில் நாம் சிறந்த நன்மதிப்பை இன்று பெற்றுள்ளோம். அவ்வாறான மாற்றம் ஏற்படவில்லையாயின் நாடானது இருண்ட யுகத்துக்குள் சென்றிருக்கும் என்றார்.
அம்பாறை மாவட்ட தமிழ்ப் பட்டதாரிகளின் கோரிக்கைகளையும் உண்ணாவிரத போராட்டங்களையும் கொச்சைப்படுத்தி தட்டிக்கழிக்க முயற்சிக்க கூடாது
அம்பாறை மாவட்ட தமிழ்ப் பட்டதாரிகளின் கோரிக்கைகளையும் உண்ணாவிரத போராட்டங்களையும் கொச்சைப்படுத்தி தட்டிக்கழிக்க முயற்சிக்க கூடாது--தலைவர் எம்.திலீபன்
கிழக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் வழங்கப்பட்டுள்ள அரச தொழில் நியமனங்களில் தமிழர்களின் இன விகிதாசாரத்தை விட அதிகமான தொழில் வாய்ப்புக்களை அரச திணைக்களங்களில் வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபையால் தெரிவிக்கப்படுகின்றது.
இதை காரணம் காட்டி அம்பாறை மாவட்ட தமிழ்ப் பட்டதாரிகளின் கோரிக்கைகளையும் உண்ணாவிரத போராட்டங்களையும் கொச்சைப்படுத்தி தட்டிக்கழிக்க முயற்சிக்க கூடாது என அம்பாறை மாவட்ட தமிழ்ப் பட்டதாரிகளின் சங்கத் தலைவர் எம்.திலீபன் தெரிவித்தார்.
திருகோணமலையில் தொடர்ந்து 6ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் உண்ணாவிரத போராட்டத்தின் நோக்கம் பற்றி இன்று திங்கட்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், அம்பாறை மாவட்ட தமிழ்ப் பட்டதாரிகளாகிய நாம் எமக்கு மாத்திரம் தொழில் கிடைக்க வேண்டுமென்று இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவில்லை.எதிர்காலத்தில் தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகங்கள் சென்று அங்கு பட்டத்தினைப் பெற்று வந்து இவ்வாறு வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடத்தி அரச தொழில்களைப் பெற வேண்டிய இந்த சீரழிவான கலாசாரம் மாற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். கல்வியியல் கல்லூரிகளில் தமது படிப்பினை முடித்து தொழிலுடன் வீட்டுக்கு திரும்புவது போன்று பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்பினை முடித்து வீடு திரும்பும் போது தொழில் வாய்ப்பு பெற்றுச் செல்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எதிர்காலத்தில் தமது திட்டங்களில் முன்னெடுக்க வேண்டும். தொடர்ந்து இந்நிலைமைகள் காணப்படுமிடத்து பல்கலைக்கழகங்களில் கல்விக் கற்று பட்டத்தினை பெறுகின்ற பட்டதாரிகளின் மனநிலைகளில் ஒரு தாழ்வுச் சிக்கல்களை ஏற்படுத்துவதுடன் பல்கலைக்கழக கல்வியையும் பட்டத்தினையும் ஏனைய துறைகள் ஊடாக தொழிலைப் பெறுகின்றவர்கள் இழிவாக நோக்கும் நிலைமையும் ஏற்படும் என்றார். மேலும்,இந்நிலைமைகள் மாற்றப்பட வேண்டும்.அத்துடன் தமிழ்ப் பட்டதாரிகளுக்கான கௌரவங்களை கொடுத்து தாம் தொடர்ந்து இவ்வாறு வீதிகளில் நின்று தொழில் பெறும் கலாசாரம் நீக்கப்பட்டு நியாயமான முறையில் திறமைகளின் மூலமாக தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள அரசு சந்தர்ப்பங்களை வழங்குவதுடன் எமது இந்த உண்ணாவிரத போராட்டமே இறுதியான போராட்டமாகவும் இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Friday, 2 October 2015
இலங்கைக்கான ஜப்பான் கராத்தே-டோ மருயோஷிகாய் சங்கம் ஏற்பாடு செய்துள்ள பயிற்சிப் பட்டறை
இலங்கைக்கான ஜப்பான் கராத்தே-டோ மருயோஷிகாய் சங்கம் ஏற்பாடு செய்துள்ள ஆலையடிவேம்பு பிரதேச வீரர்களுக்கான நான்கு நாள் சர்வதேச கராத்தே பயிற்சிப் பட்டறை ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் இன்று (02) காலை ஆரம்பமாகியுள்ளது.
இலங்கைக்கான ஜப்பான் கராத்தே-டோ மருயோஷிகாய் சங்கத்தின் தலைவி கே.சஷித்ரா லக்மினி ராமச்சந்திரனால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த பயிற்சிப் பட்டறை கிழக்கு மாகாண JKMO பிரதம போதனாசிரியர் சென்சி கே.கேந்திரமூர்த்தி தலைமைமையில் கறுப்புப்பட்டி தரம்பெற்ற சுமார் 50 வீர, வீராங்கனைகளுக்கான பயிற்சி மையமாக இது அமையப்பெற்றுள்ளது.
ஆலையடிவேம்பு பிரதேச வரலாற்றில் முதன்முறையாக ஜப்பான் நாட்டு சர்வதேசப் புகழ்பெற்ற JKMO பயிற்றுவிப்பாளர் கிரான்ட் மாஸ்டர் ஷிஹான். சசாகி டொஷியட்சு மற்றும் அவரது குழுவைச் சேர்ந்த சென்சாய். சசாகி ஷுன்சுகே, சென்சாய். யமடா கெஞ்சி, சென்சாய். இஷிடா சுயோஷி ஆகியோர் பயிற்றுவிப்பாளர்களாகக் கலந்துகொண்டுள்ள இப்பயிற்சிப் பட்டறையின் உத்தியோகபூர்வத் தொடக்க விழாவுக்குப் பிரதம அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசனும், கௌரவ அதிதியாக திருக்கோவில் கல்வி வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் வி.குணாளனும் கலந்து சிறப்பித்தார்கள்.
இத்தொடக்க விழாவில் தமிழர் பாரம்பரிய மங்கள வாத்திய இசையோடு வரவேற்கப்பட்ட அதிதிகள் மங்கல விளக்கேற்றி குறித்த பயிற்சிப் பட்டறையை ஆரம்பித்துவைத்தார்கள். இதன்போது கடந்த வருடம் இயற்கையெய்திய முன்னாள் இலங்கை ஷோட்டோக்கன் கராத்தே சங்கத்தின் தலைவரும், JKMO பிரதம போதனாசிரியருமான ஷிஹான். கே.ராமச்சந்திரனுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அடுத்து ஜப்பான் கராத்தே-டோ மருயோஷிகாய் சங்கத்தின் தலைவி, திருக்கோவில் கல்வி வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆகியோரின் சிறப்புரைகள் இடம்பெற்றதுடன், பாரம்பரிய பரதநாட்டியக் கலை நிகழ்வும் இடம்பெற்றது.
தொடர்ந்து இடம்பெற்ற சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் கடந்த வருடம் கராத்தே-டோ மருயோஷிகாய் பயிற்சிகளில் உயர் தராதரங்களைப் பூர்த்திசெய்த வீர, வீராங்கனைகள் ஜப்பானிய கிரான்ட் மாஸ்டர் ஷிஹான். சசாகி டொஷியட்சுவிடமிருந்து பாராட்டுக்களையும் சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டனர்.
இன்று முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (05) வரை தொடர்ச்சியாக நான்கு நாட்கள் நடைபெறவுள்ள குறித்த பயிற்சிப் பட்டறை தினமும் நான்கு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு காலை 8.30 முதல் இரவு 7.30 வரை இடம்பெறவுள்ளதாகக் குறிப்பிட்ட கிழக்கு மாகாண JKMO பிரதம போதனாசிரியர் சென்சி கே.கேந்திரமூர்த்தி, எமது பிரதேசத்தில் இவ்வாறானதொரு பயிற்சி நிகழ்வு சர்வதேசத் தரத்திலான பயிற்றுவிப்பாளர்களைக் கொண்டு நடாத்தப்படுவது உண்மையிலேயே எமது வீரர்களுக்குக் கிடைத்ததொரு மிகப்பெரிய கௌரவமும் வரப்பிரசாதமுமாகும் எனவும் குறிப்பிட்டார்.
வாராந்த சந்தை முறை ஏற்படுத்தப்படும்
திவிநெகும பயனாளிகளின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்காக எதிர்காலத்தில் வாராந்த சந்தை முறைமை ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.எம்.முசாரத் தெரிவித்தார். பொத்துவில் பிரதேச செயலக திவிநெகும பிரிவின் தலைமையக முகாமையாளர் என்.கிருபாகரன் தலைமையில் நேற்று வியாழக்கிழமை (01) பிரதான பஸ் நிலையத்திற்கு அருகில் நடைபெற்ற 'உற்பத்தி பொருட் கண்காட்சியும் விற்பனையும்' நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 'திவிநெகும பயனாளிகளின் உற்பத்திகளை ஊக்குவிக்கும் அதேவேளைஇ சிறந்த சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தி
கொடுப்பதும் முக்கியமானதாகும். எனவே தான் இவ்வாறான நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இச்சந்தை வாய்ப்பானது உற்பத்தியாளர்களின் உற்பத்தி ஆற்றலை அதிகரிப்பதுடன் வருமானத்தையும் ஈட்டிக் கொடுக்கும்' என்றார்
Subscribe to:
Posts (Atom)