Monday, 20 May 2019

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள்

haran
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் செவ்வாய்கிழமை தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அப் பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளர் ஏ. பகீரதன் தெரிவித்தார்.


சிங்கள தமிழ் புத்தாண்டு விடுமுறையின் பின்னர் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் கடந்த மாதம் 21 ஆம் திகதி மட்டக்களப்பு உட்பட நாட்டில் பல பாகங்களிலும் தற்கொலைத் தாக்குதல்கள் இடம்பெற்றதையடுத்து கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் மீளத் துவங்குவது பிற்போடப்பட்டிருந்தது.

பல்கலைக்கழக வளாகம் பாதுகாப்புத் தரப்பினரால் சோதனையிடப்பட்டு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து செவ்வாய்கிழமை தொடக்கம் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படுவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளரின் பொது அறிவித்தலின்படி,

விஞ்ஞான பீடம் முதலாம் வருடம் 2ஆம் அரையாண்டு 2016-2017 பிரிவு, மூன்றாம் வருடம் 2 ஆம் அரையாண்டு 2014-2015 பிரிவு அத்துடன் அனைத்து விஷேட கற்கைநெறிகளும் பிரிவுகளுக்கான கல்வி நடவடிக்கைகளும், விவசாய பீடம், முதலாம், வருடம் 2 ஆம் அரையாண்டு 2016-2017 பிரிவு, மூன்றாம், வருடம் 2 ஆம் அரையாண்டு 2014-2015 பிரிவு, நான்காம் வருடம் 2 ஆம் அரையாண்டு 2013-2014 பிரிவுகளுக்கான கல்வி நடவடிக்கையும், சௌக்கிய பராமரிப்பு பீடத்தின் மருத்துவ துறையில் 12 பிரிவு மற்றும் 13 பிரிவு அதனுடன் தாதியர் துறையில் 11 ஆம் பிரிவுகளுக்கான கல்வி நடவடிக்கைளும் செவ்வாய்கிழமை (21.05.2019) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

வர்த்தக முகாமைத்துவ பீடம், மூன்றாம் வருடம், 2 ஆம் அரையாண்டு 2014-2015 பிரிவு, மூன்றாம் வருடம் முதலாம் அரையாண்டு 2015-2016 பிரிவு, இரண்டாம் வருடம் முதலாம் அரையாண்டு 2016-2017 பிரிவு, முதலாம் வருடம் முதலாம் அரையாண்டு 2017-2018 பிரிவுகளுக்கான கல்வி நடவடிக்கைகளும், அத்துடன் தொழில்நுட்ப அனைத்துப் பிரிவுகளுக்கான கல்வி நடவடிக்கைளும் புதன்கிழமை 22.05.2019 மீளவும் ஆரம்பிக்கின்றன.

முதலாம் வருடம் முதலாம் அரையாண்டு 2017-2018 பிரிவு, இரண்டாம், வருடம் 2 ஆம் அரையாண்டு 2015-2016 பிரிவுகளுக்கான கல்வி நடவடிக்கைகளும், கலை காலாசார பீடம், முதலாம், வருடம் 2 ஆம் அரையாண்டு 2016-2017 பிரிவு, இரண்டாம், வருடம் முதலாம் அரையாண்டு 2015-201 பிரிவுகளுக்கான கல்வி நடவடிக்கைகளும் எதிர்வரும் வாரம் திங்கட்கிழமை 27.05.2019 மீள ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் வருட 2ம் அரையாண்டு பரீட்சை ஜூன் மாதம் 3ஆம் திகதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: