அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் மே18 முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுக்கு ஆத்ம சாந்தி வேண்டிய தமிழ் உறவுகளின் நினைவேந்தல் நிகழ்வு கண்ணீர்மல்க தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந் நினைவேந்தல் நிகழ்வானது அம்பாறை மாவட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் மாவட்ட இணைப்பாளர் தம்பிராசா செல்வராணி தலைமையில் திருக்கோவில் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் முன்பாக இடம்பெற்றன.
இதன்போது பிரதான சுடர் ஏற்றப்பட்டு தாய்மார் கண்ணீர்மல்க மெழுகுவர்த்திகள் ஏற்றி உயிர்நீத்த தமது உறவுகளின் ஆத்மசாந்தி வேண்டிய பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.
இந் நினைவேந்தல் நிகழ்வில் தாய்மார்கள் கலந்து கொண்டதுடன் திருக்கோவில் பிரதேசசபை தவிசாளர் இ.வி.கமலராஜன், காரைதீவு பிரதேசசபை தவிசாளர் கே.ஜெயசிறில் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டு தமது உறவுகளுக்கு அமைதியான முறையில் அஞ்சலிகளை செலுத்தினர்.
No comments:
Post a Comment