Thursday, 2 May 2019

தேசிய அடையாள அட்டை அதிகரிப்பு




தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்வதற்காக ஆட்பதிவு திணைக்களத்திற்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


கடந்த இரண்டு தினங்களாக தேசிய அடையாள அட்யை பெற்றுக் கொள்வதற்காக பெரும்பாலோனர் வருகை தருவதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.

இதற்கு முன்னர் நாளாந்தம் 1600 தேசிய அடையாள அட்டைகளே விநியோகிக்கப்பட்டன. தற்பொழுது 2000 தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். நாட்டில் தற்பொழுது நிலவும் பாதுகாப்பு நிலைமையை அடுத்து தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்றற தாக்குதல் சம்பவத்துக்கு பின்னர் 800 க்கு மேற்பட்ட தேசிய அடையாள அட்டைகளை கடந்த வாரத்தில் விநியோகிக்கப்பட்டிருப்பதாகவும் ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்தார்.
தேசிய அடையாள அட்டை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு Rating: 4.5 Diposkan Oleh: Team

No comments: