Saturday, 18 May 2019

பலத்த காற்றுடன் மழை

sriram..
திருக்கோவில் பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை (17) பலத்த காற்றுடன் மழை பெய்ததுடன் மின்னல் தாக்கமும் அதிகமாகக் காணப்பட்டது.


அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் மின்னல் தாக்கி காஞ்சிரம்குடா ஸ்ரீவள்ளிபுரம் கிராமத்தைச் சேர்ந்த 17வயது சிறுவன் ஒருவன் பலியாகியுள்ளதுடன் பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக மரங்கள் முறிந்து விழுந்து பல வீடுகளும் சேதமடைந்துள்ளன.




இந்நிலையில் காஞ்சிரம்குடா பாலத்தடியில் மீன் விற்றுக் கொண்டிருந்த ஸ்ரீவள்ளிபுரம் கிராமத்தைச் சேர்ந்த 17வயதுடைய ராஜகுமார் எனும் சிறுவன் மின்னல் தாக்கி மரணமடைந்துள்ளான்.

இதேவேளை விநாயகபுரம், காஞ்சிரம்குடா ஆகிய கிராமங்களில் பலத்த காற்று காரணமாகப் பல வீடுகளின் கூரைகளும் சேதமடைந்துள்ளன.
குறித்த சிறுவனின் சடலம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




திருக்கோவில் காஞ்சிரம்குடா பிரதேசத்தில் மின்னல் தாக்கி சிறுவன் பலி! Rating: 4.5 Diposkan Oleh: Team New

No comments: