Monday, 30 October 2017

நாம் போதையற்ற இளைஞர்கள்

haran


மட்டு கோறளைப்பற்று வாழைச்சேனையில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கோறளைப்பற்று  இளைஞர் கழக பிரதேச சம்மேளனத்தின் ஏற்பாட்டில் "நாம் போதையற்ற இளைஞர்கள்" எனும் தொனிப் பொருளுக்கமைய போதைப் பொருள் பாவனையினை குறைப்பதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றுள்ளது.


கோறளைப்பற்று  பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில்
 பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் இன்று (30) இடம்பெற்ற நிகழ்வினை இளைஞர் சேவைகள் அதிகாரி ரி.சபியதாஸ் அவர்களின் ஆலோசனைக்கு அமைய இளைஞர் கழக பிரதேச சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்தது.

நிகழ்வில் கலந்து கொண்ட பிரதேச செயலாளர் கருத்து தெரிவிக்கையில் "அல்ககோலும் ஒருவகையான நஞ்சுதான் அதனை பாவிப்பதும் நச்சு பொருளை பாவிப்பதற்கு சமனாகும் அல்ககோலை அருந்துவதால் முதலில் பாதிக்கப்படுவது குடல் பின்னர் ஈரல் அழிவடையும் இவ்வாறு தொடர்ந்து செல்லும் நிலையில் அது மரணத்தை கொண்டு வரும் ஆகவே ஒவ்வொருவரும் போதைப் பொருள் பாவிப்பதை தவிர்த்து சுயநலக் கட்டுப்பாடுடன் நடந்துகொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.

மேலும் விழிப்புணர்வு கருத்தரங்கினை பொது சுகாதார பரிசோதகர் ஜெ.ஜசோதரன் நடத்தியிருந்ததுடன் இக்கருத்தரங்கில் பிரதேச இளைஞர் யுவதிகள் பலர் கலந்து கொண்டு நன்மை பெற்றனர்.

அத்தோடு குறித்த நிகழ்வில் அதிதிகளாக பிரதேச செயலாளர் வ வாசுதேவன், வாழைச்சேனை  புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய பிரதம குரு பிரம்மஸ்ரீ புஸ்ப பிரணவ சர்மா குருக்கள், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நெஸ்கோ முகாமையாளர் பி கிருபைராசா, கிராம சேவகர் க கிருஷ்ணகாந்த், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சம்மேளன தலைவர் ஏ.வினோத், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.













No comments: