haran
(காரைதீவு நிருபர் சகா)
கல்முனை மாநகரசபைப்பிரதேசத்தை நான்காகப்பிரிப்பதில் கல்முனை வாழ்
தமிழ்மக்களுக்கு எவ்விதத்திலும் உடன்பாடில்லை. இது திட்டமிட்டு கல்முனை பிரதேச தமிழ்க்கிராமங்களின் இருப்பைக் கேள்விக்குறியாக்கும் சதி முயற்சியாகும். இதற்கு ஒருபோதும் நாம் அனுமதிக்கப்பபோவதில்லை.
இவ்வாறு கல்முனை மாநகரசபையின் மன்னாள் எதிர்க்கட்சித்தலைவரும் ரெலோ கட்சியின் உபதலைவருமான ஹென்றிமகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில்தெரிவித்துள்ளார்.
இன்று(30) திங்கட்கிழமை இதுவிடயம் தொடர்பாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின்தலைவர்களையும் சம்பந்தப்பட்ட உள்ளுராட்சி அமைச்சர் பைசர்முஸ்தபாவையும்அமைச்சரவை இனநல்லிணக்க அமைச்சரான மனோகணேசனையும் சந்திக்கவிருப்பதாகவும்
அவர் தெரிவித்தார்.
அவரது அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
ஏற்கனவே கல்முனையை நான்கு உள்ளுராட்சிசபைகளாகப் பிரிப்பது தொடர்பில்முயற்சிகள் எடுக்கப்பட்டபோது நாம் பகிரங்கமாகவே அதற்கு எதிர்ப்புத்தெரிவித்திருந்தோம். அது எவ்விதத்திலும் எமக்கு உடன்பாடில்லை.
சாய்நதமருதுக்கு தனியான பிரதேசசபை வழங்கப்படுவதில் எமக்கு எவ்வித
ஆட்சேபனையுமில்லை. அதற்கு எமது தார்மீக பரிபூரண ஆதரவை
வழங்கத்தயாராகவுள்ளோம்.
ஆனால் மிகுதிப்பரப்பை மூன்றுதுண்டுகளாப்பிரிப்பதென்பது தமிழ்மக்களை
திட்டமிட்டு பிரிக்கச்செய்யும் சதி முயற்சியாகும். அதுமாத்திரமல்ல
பாரம்பரியமாக கல்முனையில் வாழ்ந்துவரும் தமிழ்மக்களின் இருப்பைக்
கேள்விக்குறியாக்கும் ஒரு சதி முயற்சியாகவே இதனை நாம் பார்க்கின்றோம்.
புதியநகரஅபிவிருத்தித்திட்த்திலும் தமிழர்களுக்கு இருட்டடிப்பு!
ஏலவே கல்முனை நகர அபிவிருத்தித்திட்டம் என்ற போர்வையில்
தமிழ்த்தரப்பிற்குத் தெரியாமல் எவ்விதத்திலும் கலந்தாலோசிக்காமல்
தமிழர்காணிகளை அபகரித்து தமிழரின் இருப்பை சீர்குலைக்கும் நோக்கில்
முன்னெடுக்கப்பட்டுவந்த செயற்பாட்டிற்கு எமது ஆட்சேபனையைத்
தெரிவித்திருந்தோம். அதன்பின்னராவது அதனை பகிரங்கமாக
வெளிப்படுத்தினார்களா? இல்லை. இந்த நிலையில் இனநல்லுறவைப்பற்றி இவர்கள்பேசுவதை நம்பலாமா?
சாய்நதமருது மக்களின் முன்னுதாரணம்!
சாய்நதமருது தனியாகப்பிரிக்கப்பட்டால் கல்முனை மாகநரசபை தமிழரின்
கைக்குப்போய்விடுமென்று மற்றத்தரப்பினர் இனவாநச்சுவிதையைக்
கக்கியுள்ளனர். உண்மையில் சாய்நதமருது பிரிக்கப்பட்டாலும் 60வீதம்
முஸ்லிம்களும் 40வீதம் தமிழர்களும்தான் இருக்கப்போகின்றார்கள் என்பதனை அறியாமல் யாருமில்லை.
நிற்க இதுவிடயத்திற்கு சாய்ந்தமருது முஸ்லிம்சகோதரர்கள் அதற்கு
இவ்வாறானதொரு கருத்தையும் பதிந்துள்ளனர். அதாவது அப்படி ஒருநிலைவரின்சாய்ந்தமருது மக்கள் கல்முனை தமிழ்சகோதரர்களோடு இணைந்து கல்முனை மாகநரசபையை கைப்பற்றுவோம் என்று கூறியுள்ளமை வரவேற்புக்குரியது.
கிழக்கு மாகாணசபையை த.தே.கூட்டமைப்பும் ஸ்ரீ.ல.மு.காங்கிரசும் இணைந்து ஆளலாமென்றால் கல்முனை மாகரசபையை சாய்ந்தமருது முஸ்லிம் சகோதரர்களும்கல்முனை தமிழ்மக்களும் இணைந்து ஏன் ஆட்சியமைக்க முடியாது?
தற்போது மீண்டும் அதே பல்லவி!
தற்போது சாய்ந்தமருது முஸ்லிம் சகோதரர்கள் தமது அரசியல் உரிமையை
முனைப்பாக பேரணி நடாத்தி ஆகரோசமாகக் கேட்கமுற்படும்போது மீண்டும்
கல்முனையை நான்காகப்பிரிக்கும் திட்டத்தை முன்வைத்து அவர்களது அரசியல்உரிமைக்கு சாவுமணி அடிக்கமுனைகிறார்கள்.
கடந்தவாரம் முஸ்லிம் கட்சியொன்று பிரதமரைச்சந்தித்து இந்தவிடயத்தில்
குழுவும் அமைத்து செயற்படுவதாகத் தெரிகிறது.
இந்த விடயத்தில் நாம் ஒருபோதும் உடன்படப்போவதில்லை. இப்பிரிப்பு
தமிழர்பிரதேசத்தில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே அதனை நாம் நிராகரிக்கின்றோம்.
அப்படி சிலவேளை அது சாத்தியமாகவருமானால் எமது மாற்றுக்கருத்தையும் நாம்முன்வைக்கவிரும்புகின்றோம்.
அதாவது கல்முனையைப்பிரிக்கின்றபோது கல்முனை மாகநர சபைக்குட்பட்ட கல்முனை நற்பிட்டிமுனை சேனைக்குடியிருப்பு பாண்டிருப்பு பெரியநீலாவணை துரைவந்தியமேடு ஆகிய தமிழர் கிராமங்களை மாத்திரம் இணைத்து ஒரு பிரதேசசபையைத் தரவேண்டும்.
கல்முனை தமிழ்ப்பிரதேச செயலக விவகாரத்தில்...
கல்முனை தமிழ் பிரதேச செயலக விவகாரத்தில் சில முஸ்லிம் தலைமைகள்நடந்துகொள்ளும் முறைமையை உலகறியும். இவர்கள்தான் ஒற்றுமையைப்பற்றி மேடைகளில் வாய்கிழியக்கத்துவார்கள்.
ஆனால் பல தசாப்தங்களைத்தாண்டி உரிய அந்தஸ்து இல்லாமல் அல்லல்படும் பிரதேச செயலக தரமுயர்த்தலுக்கு முட்டுக்கடையாக உள்ளனர். இவர்களை நம்பி புதிய நகரஅபிவிருத்தித்திட்டம் கல்முனையை
நான்காகப்பிரிக்கும் திட்டத்திற்கெல்லாம் துணைபோகலாமா?
இறுதியாக கல்முனைவாழ் தமிழ்மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வண்ணம்
இடம்பெறும் எத்தகைய செயற்பாடுகளுக்கும் நாம் ஒருபோதும்
இடமளிக்கப்போவதில்லை. அதற்காக எத்தகைய போராட்டத்தை முன்னெடுக்கவும்தயாராகவுள்ளோம்.
இவ்வாறு இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment