Thursday, 12 October 2017

பெற்றோலிய வள அபிவிருத்தி பிரதியமைச்சரால் ஆலையடிவேம்பில் தளபாடங்கள் வழங்கிவைப்பு




பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் பெற்றோலிய வள அபிவிருத்தி பிரதியமைச்சர் அனோமா கமகே அவர்களால் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அக்கரைப்பற்று – 7/1 கிராம சேவகர் பிரிவிலுள்ள ஜீவ வார்த்தை கிறிஸ்தவ ஆலயத்துக்கும், அக்கரைப்பற்று – 7/4 கிராம சேவகர் பிரிவிலுள்ள சுவாமி விபுலானந்தா பாலர் பாடசாலைக்கும் ரூபாய். 125,000 பெறுமதியான தளபாடங்களை வழங்கிவைக்கும் நிகழ்வுகள் நேற்று (11) இடம்பெற்றன.

உதவி பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் தலைமையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் ஜீவ வார்த்தை கிறிஸ்தவ ஆலயப் பிரமுகர்களும், சுவாமி விபுலானந்தா பாலர் பாடசாலையின் தலைவர் மற்றும் ஆசிரியைகளுடன் ஆலையடிவேம்பு பிரதேச பொதுமக்களும் கலந்துகொண்டனர்.











No comments: