மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பகுதியில் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொக்கட்டிச்சோலை முத்துலிங்கப்பிள்ளையார் ஆலய வீதியில் வசிக்கும் 26 வயதுடைய விஜயரட்னம் தர்மினி என்னும் ஐந்து வயது பிள்ளையின் தாயே மர்மமான முறையில் நேற்றையதினம் (திங்கட்கிழமை) உயிரிழந்துள்ளார்.
இதேவேளை குறித்த பெண் உயிரிழந்த வீட்டில் கயிறு ஒன்று தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும், கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் உயிரிழந்தவரின் சகோதரியின் பாடசாலை நண்பன் குறித்த வீட்டில் இருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் குறித்த பட்டிப்பளையைச் சேர்ந்த இளைஞன் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

haran
No comments:
Post a Comment