Monday, 2 October 2017

கோழிக்குஞ்சுகள் வழங்கி வைப்பு

haran


கிழக்கு மாகாண விவசாய கால்நடை அமைச்சின் செயற்திட்டத்தின் கீழ் கால்நடை வளர்ப்பாளர்களை ஊக்குவிக்கும் முகமாக கோழிக்குஞ்சு வளர்ப்பினை மேற்கொள்ளும் பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் முதலைக்குடாவில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா மற்றும் கால்நடை அபிவிருத்தித் திணைக்கள உத்தியோகஸ்தர்கள், பயனாளிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது கிழக்கு மாகாண கால்நடை அபிவிருத்தித் திணைக்களத்தினால் முனைக்காடு, முதலைக்குடா பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சுமார் 6500 ரூபா பெறுமதியான கோழிக்குஞ்சுகள் 40 பேருக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




No comments: