Tuesday, 17 October 2017

மாணவர்களுக்கு உதவிகள் வழங்கிவைப்பு

                                                              (ஜெ.ஜெய்ஷிகன்)

இலங்கை சைவப்புலவர் கே.வி.மகாலிங்கம் சமூக அறக்கட்டளை அமைப்பின் நிதி உதவி மூலம் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையால் கல்குடா கல்வி வலயத்தில் 2016ம் ஆண்டு பல்கலைக் கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வு கல்குடா வலயக் கல்வி அலுவலகத்தில் செவ்வாய்கிழமை (இன்று) இடம்பெற்றது.

கல்குடா வலயக் கல்வி பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி.சுஜாத்தா குலேந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
மேலும் அதிதிகளாக கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் தி.ரவி, முன்னை நாள் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.சுபா சக்கரவர்த்தி, அமைப்பின் தலைவர் வைத்தியர் எம்.ஞானகுமார், அமைப்பின் உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் வேண்டுகோளின் பிரகாரம் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் இருந்து 2016ம் ஆண்டு பல்கலைக் கழகத்திற்கு தெரிவான பொருளாதார ரீதியாக நலிவுற்ற மாணவர்கள் இருபத்தி எட்டு பேருக்கு பத்தாயிரம் ரூபாய் வீதம் நிதி உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.

கடந்த வருடமும் பாராளுமன்ற உறுப்பினரின் வேண்டுகோளின் பிரகாரம் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட பதினைந்து வறிய மாணவர்களுக்கும் நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.












No comments: