Friday, 13 October 2017

பிரதியெடுக்கும் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.



கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் பெறப்பட்ட போட்டோ பிரதியெடுக்கும் இயந்திரம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது.

மட்/ககு  உதயன்மூலை விவேகானந்தா வித்தியாலயம் மற்றும் சித்தாண்டி விநாயகர் கிராமம் அலைமகள் வித்தியாலயம் போன்றவற்றிற்கே முன்னாள் அமைச்சரின் நிதி ஒதுக்கீட்டில் பெறப்பட்ட போட்டோ பிரதியெடுக்கும் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.


இந்நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பொது அமைப்புகளின் உறுப்பினர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது போட்டோ பிரதியடுக்கும் இயந்திரம் பாடசாலை அதிபர், ஆசிரியர், மாணவர்களிடத்தில் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டதுடன் உதயன்மூலை விவேகானந்தா வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் 154 புள்ளிகளைப் பெற்று சித்தியெய்திய மாணவனும், வகுப்பாசிரியரும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
















haran

No comments: