Monday, 23 October 2017

கைக்குண்டு மீட்ப்பு

haran
மட்டக்களப்பு அம்பிளாந்துறைப் பிரதேசத்தில் உள்ள தனியார் காணி ஒன்றில் இருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.


கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்திற்கு பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து அப்பிரதேசத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த பகுதியில் பாதுகாப்பினை வழங்கி வருகின்றனர்.

அத்துடன், இராணுவத்தின் குண்டு செயலிழக்கச் செய்யும் படைப் பிரிவினருக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வயல் விதைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவர்கள் ஓய்வெடுக்க அமர்ந்த இடத்திலேயே இந்த கைக்குண்டு கண்பிடிக்கப்பட்டுள்ளதுடன், இது விடுதலைப்புலிகளின் காலத்தில் கைவிடப்பட்ட கைக்குண்டு எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: