Monday, 23 October 2017

காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அம்பாறை பாலமுனை பிரதேசத்தில் நேற்று (23) காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாலமுனை 5ஆம் பிரிவு கடற்கரை வீதியைச்சேர்ந்த 60 வயதுடைய ஆதம்பாவா ஹசன் என்பவரே உயிரிழந்ததாக பெலிஸார் தெரிவித்தனர்.


மோட்டார் சைக்கிளில் மீன் பிடிப்பதற்காக பாலமுனை முள்ளிக்குளம் மலை பிரதேசத்தை அண்டிய வீதியால் சென்று கொண்டிருக்கும் போதே அவரை யானை தாக்கியுள்ளது.

தாக்குதலுக்குள்ளானவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
haran

No comments: