Tuesday, 31 October 2017

அகில இலங்கை கராத்தே சுற்றுப் போட்டிகளில் ஆலையடிவேம்பு மாணவன் சாதனை. - ராம் கராத்தே சங்கத்தின் மற்றுமொரு மைல்கல்.




கொழும்பு, சென். ஜோசப் கல்லூரியின் உள்ளக விளையாட்டரங்கில் அண்மையில் இடம்பெற்ற இவ்வாண்டுக்கான அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கராத்தே சுற்றுப் போட்டிகளில் கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற ராம் கராத்தே சங்கத்தின் பயிலுனரும், அக்கரைப்பற்று ஸ்ரீ இராம கிருஷ்ணா தேசிய கல்லூரியின் க.பொ.த. சாதாரண தர மாணவனுமான சோதீஸ்வரன் ரிசோபன் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று தேசிய சாதனை படைத்துள்ளார்.

Monday, 30 October 2017

நாம் போதையற்ற இளைஞர்கள்

haran


மட்டு கோறளைப்பற்று வாழைச்சேனையில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கோறளைப்பற்று  இளைஞர் கழக பிரதேச சம்மேளனத்தின் ஏற்பாட்டில் "நாம் போதையற்ற இளைஞர்கள்" எனும் தொனிப் பொருளுக்கமைய போதைப் பொருள் பாவனையினை குறைப்பதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றுள்ளது.

தமிழ்மக்களுக்கு எவ்விதத்திலும் உடன்பாடில்லை

haran
(காரைதீவு  நிருபர் சகா)

கல்முனை மாநகரசபைப்பிரதேசத்தை நான்காகப்பிரிப்பதில் கல்முனை வாழ்
தமிழ்மக்களுக்கு எவ்விதத்திலும் உடன்பாடில்லை. இது திட்டமிட்டு கல்முனை பிரதேச தமிழ்க்கிராமங்களின் இருப்பைக் கேள்விக்குறியாக்கும் சதி முயற்சியாகும். இதற்கு ஒருபோதும் நாம் அனுமதிக்கப்பபோவதில்லை.

Tuesday, 24 October 2017

பிற்பொக்கற் அடித்த திருடன் கமராவில் சிக்கினான்

haran

(க.சரவணன்)

மதுபானக்கடையில் மதுபானம் வாங்கிக் கொண்டிருந்த ஒருவரின் 45 ஆயிரம் ரூபா பணத்துடன் கைப்பையை பிற்பொக்கற் அடித்த ஒருவரை சீசீரி கமராவில்  பதியப்பட்ட காட்சி மூலம்  ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்த சம்பவம்அக்கரைப்பற்றில் இடம்பெற்றதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.

Monday, 23 October 2017

காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அம்பாறை பாலமுனை பிரதேசத்தில் நேற்று (23) காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாலமுனை 5ஆம் பிரிவு கடற்கரை வீதியைச்சேர்ந்த 60 வயதுடைய ஆதம்பாவா ஹசன் என்பவரே உயிரிழந்ததாக பெலிஸார் தெரிவித்தனர்.

கைக்குண்டு மீட்ப்பு

haran
மட்டக்களப்பு அம்பிளாந்துறைப் பிரதேசத்தில் உள்ள தனியார் காணி ஒன்றில் இருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.

Wednesday, 18 October 2017

தீபத்திருநாளாகும்





ஜப்பசி மாதம் தேய்பிறை சதுர்தியில் உலகில் எங்கெல்லாம் இந்துக்கள் வாழ்கின்றனரோ அங்கெல்லாம் மிகக் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகை தீபத்திருநாளாகும்

இத் தினம் பண்டிகை என்பதற்கு அப்பால் மிக புனிதமாக இறைவனை பிரார்த்திக்கும் தினம் என்றும் இத்தினத்தில் உபவாஷமிருந்து விஷ்னுனாமங்கள் ஜெபித்து விஷ்னு தரிசனம் செய்வோருக்கு வைகுண்ட மோட்ஷம் கிடைக்கும் என்று புராணங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது


பண்டிகை நாட்கள் சமுக ஒற்றுமைக்கும் கலை கலாச்சார வெளிப்பாடுகளுடன் நண்பர்களுடனும் உற்றார் உறவினர்களுடனும்
மகிழ்சியாக இருத்தல் போன்றதற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது


இன்றைய நாளில் தீமைகள் என்னும் இருள் அகன்று உலகெங்கும் நண்மைகள் நிறைந்த பக்திப் பேரொளியைப் பெற  தித்திக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்

உங்கள் வாழ்த்துக்களும் இப் பகுதியில் இடம் பெற "அனுப்பி வையுங்கள் பரிசுகளை வெல்லுங்கள்"
 sms / mms / viber / whatsapp........   +94777514279
haran

Tuesday, 17 October 2017

சர்வதேச தரத்திலான சிறைச்சாலை திறப்பு


சர்வதேச தரத்திலான சிறைச்சாலை கட்டத்தொகுதியொன்று அங்குணகொலபெலஸ்ஸ என்ற இடத்தில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான நிகழ்வு நேற்று இடம்பெற்றபோது சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு , புனர்வாழ்வளிப்பு , மீள்குடியேற்ற மற்றும் இந்தமத அலுவல்கள் அமைச்சர் சுவாமிநாதன் இந்த சிறைச்சாலையை திறந்துவைத்தார்.

மாணவர்களுக்கு உதவிகள் வழங்கிவைப்பு

                                                              (ஜெ.ஜெய்ஷிகன்)

இலங்கை சைவப்புலவர் கே.வி.மகாலிங்கம் சமூக அறக்கட்டளை அமைப்பின் நிதி உதவி மூலம் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையால் கல்குடா கல்வி வலயத்தில் 2016ம் ஆண்டு பல்கலைக் கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வு கல்குடா வலயக் கல்வி அலுவலகத்தில் செவ்வாய்கிழமை (இன்று) இடம்பெற்றது.

Friday, 13 October 2017

பிரதியெடுக்கும் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.



கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் பெறப்பட்ட போட்டோ பிரதியெடுக்கும் இயந்திரம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது.

மட்/ககு  உதயன்மூலை விவேகானந்தா வித்தியாலயம் மற்றும் சித்தாண்டி விநாயகர் கிராமம் அலைமகள் வித்தியாலயம் போன்றவற்றிற்கே முன்னாள் அமைச்சரின் நிதி ஒதுக்கீட்டில் பெறப்பட்ட போட்டோ பிரதியெடுக்கும் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

Thursday, 12 October 2017

பெற்றோலிய வள அபிவிருத்தி பிரதியமைச்சரால் ஆலையடிவேம்பில் தளபாடங்கள் வழங்கிவைப்பு




பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் பெற்றோலிய வள அபிவிருத்தி பிரதியமைச்சர் அனோமா கமகே அவர்களால் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அக்கரைப்பற்று – 7/1 கிராம சேவகர் பிரிவிலுள்ள ஜீவ வார்த்தை கிறிஸ்தவ ஆலயத்துக்கும், அக்கரைப்பற்று – 7/4 கிராம சேவகர் பிரிவிலுள்ள சுவாமி விபுலானந்தா பாலர் பாடசாலைக்கும் ரூபாய். 125,000 பெறுமதியான தளபாடங்களை வழங்கிவைக்கும் நிகழ்வுகள் நேற்று (11) இடம்பெற்றன.

Monday, 9 October 2017

பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பகுதியில் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்  பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சொற்கணை விவாதப் போட்டி


(துறையூர் தாஸன்)

மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கிய மன்றத்தால் நடாத்தப்படும் சொற்கணை  விவாதப் போட்டியின் அம்பாரை மாவட்டத்திற்கான தேர்வுப் போட்டி கடந்த சனிக்கிழமை கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில்,ஐந்தாவது தடவையாக, இம்முறை இடம்பெற்றது.

Monday, 2 October 2017

கோழிக்குஞ்சுகள் வழங்கி வைப்பு

haran


கிழக்கு மாகாண விவசாய கால்நடை அமைச்சின் செயற்திட்டத்தின் கீழ் கால்நடை வளர்ப்பாளர்களை ஊக்குவிக்கும் முகமாக கோழிக்குஞ்சு வளர்ப்பினை மேற்கொள்ளும் பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் முதலைக்குடாவில் இடம்பெற்றது.