Thursday, 14 July 2016

டொப் ரக சிகரெட்களும் விளக்கமறியலில்

தடைசெய்யப்பட்ட 80 டொப் ரக சிகரெட்களும் மற்றும் 92 கிராம் கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் அம்பாறை, சாய்ந்தமருது பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்ட
42 வயதுடைய நபரை, எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ. பயாஸ் றஸாக், இன்று செவ்வாய்க்கிழமை (12) உத்தரவிட்டுள்ளார். சாய்ந்தமருது பிரதேசத்தில் விற்பனைக்காக வைத்திருந்த வேளையில் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து நேற்றுத் திங்கட்கிழமை (11) இரவு இந்நபர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.   குறித்த நபரை, கல்முனை நீதவான் நீதமன்ற நீதவான் ஐ.பாயாஸ் றஸாக் முன்னிலையில் இன்று (12) ஆஜர் செய்த போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

No comments: