Thursday, 28 July 2016

புனித பீட திறப்பு விழா

அம்பாரை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண மகாவித்தியாலயத்தில் பழைய மாணவர் ஒருவரால் 20இலட்சம் ரூபா செலவில்  நிர்மாணிக்கப்பட்ட இராமகிருஷ்ணர் புனித பீட திறப்பு விழா இன்று(28) நடைபெற்றது.


பாடசாலையின் அதிபர் ஜே.ஆர்.டேவிட் அமிர்தலிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு இராமகிருஷ்ணமிஷன் தலைவர் சுவாமி பிரபு பிரேமானந்தா ஜீ மகராஜ் அருளாளராக கலந்து கொண்டு புனித பீட  படிகத்தினை திரை நீக்கம் செய்து வைத்தார்.



அதிபர் மற்றும் பாடசாலை சமூகத்தின் கோரிக்கைவாக பாடசாலையின் பழைய மாணவரும் அமெரிக்கா கலிபோனியா பல்கலைக்கழக விரிவுரையாளருமான எஸ். புவனேந்திரன் இதற்கான நிதியுதவியினை வழங்கி வைத்ததுடன் திறப்பு விழாவிலும் கலந்து கொண்டார்.


 வழிபாட்டுக்கிரியைகள், மாணவர்களின் பஜனை ஆகியவற்றுடன் ஆரம்பமான திறப்பு விழாவில் சுவாமி பிரபு பிரேமானந்தா ஜீ மகராஜ் நினைவு படிகத்தினை திரை நீக்கம் செய்து வைத்ததுடன் புஜை வழிபாட்டினையும் நடாத்தி வைத்தார்.

பின்னர் பாடாசாலையின் ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவிலும் கலந்து கொண்டார்.

இப்புனித பீட திறப்பு விழாவில் திருக்கோவில் வலய கல்விப்பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன், பிரதிக்கல்விப்பணிப்பாளர் வி.குணாளன், கோட்டக்கல்விப்பணிப்பாளர் எஸ்.இராசமாணிக்கம் உள்ளிட்ட  ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments: