அம்பாறை, பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (19) இரவு இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலியாகியதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த டி.ஜெயந்திரன் (வயது 35), அவரது மகன் ஜெ.கஜேய் (வயது 08) ஆகியோர் பலியான அதேவேளை, மனைவியான ஜெ.கிருஸ்ணகலா (வயது 28) மகள் ஜெ.கஜானி (வயது 03) ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். இவ்விபத்தில் படுகாயமடைந்த இருவரும் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். திருக்கோவிலிலிருந்து பொத்துவிலிலுள்ள கோவிலொன்றுக்கு மோட்டார் சைக்கிளில் இவர்கள் சென்றுகொண்டிருந்தபோது, வீதியோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரப் பெட்டியுடன் இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - See more at: http://www.tamilmirror.lk/177487#sthash.Vd6ZPyV8.dpuf

No comments:
Post a Comment