Friday, 22 July 2016

பாலியல் துஷ்பிரயோகம்

புத்திசுவாதீனமற்ற 21 வயதுடைய இளைஞர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 44 வயதுடைய முச்சக்கரவண்டிச் சாரதி ஒருவரை அம்பாறை,
அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் புதன்கிழமை (20) வீதியால் சென்றுகொண்டிருந்த குறித்த இளைஞரைப் பின்தொடர்ந்த சந்தேக நபர், எங்கு போகிறாயெனக் கேட்டு அவரை முச்சக்கரவண்டியில் ஏற்றி,  பாழடைந்த வீடொன்றுக்கு அழைத்துச்சென்றுள்ளார்.  அங்கு வைத்து குறித்த இளைஞரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதுடன், 40 ரூபாயைக் கொடுத்து வீட்டுக்குச் செல்லுமாறு சந்தேக நபர் கூறியுள்ளார். இதன் பின்னர், சந்தேக நபர் அங்கிருந்து சென்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பெற்றோரிடம் பாதிக்கப்பட்ட இளைஞர் கூறியதை அடுத்து, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments: