Monday, 18 July 2016

விபத்தில் பலி

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனைக்குடியிருப்பு பிரதான வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற  மோட்டார் சைக்கிள் விபத்தில் சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த இலங்கை மின்சார சபையின் பொத்துவில் அலுவலகத்தில் கடமையாற்றும் 2 பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம் தங்கவேல் (42 வயது) பலியாகியுள்ளார்.
மண்டூர் பிரதேசத்திலிருந்து வந்த மோட்டார் சைக்கிளும் சேனைக்குடியிருப்பிலிருந்து வந்த மோட்டார் சைக்கிளும் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது இவ்விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

No comments: