யாத்திரிகர் கள் மீது காட்டுயானை தாக்கியதில் ஜவர் காயம்
கதிர்காம யாத்திரிகர் கள் மீது காட்டுயானை தாக்கியதில் ஜவர் காயமடைந்து மூவர் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்
கதிர்காமத்திற்கு பாதையாத்திரையாக சென்ற அடியார் குழுவினர் மீது நேற்று 01ம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு காட்டு யானைகள் தாக்கியுள்ளதுடன் ஜவர் காயமடைந்த நிலையில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
குமண ஊடாக கதிர்காமம் செல்லும் வழியில் கிணற்றடி எனும் இடத்தில் பக்தர்கள் உறங்கிக் கொண்டு இருந்த வேளை திடிர்ரென வந்த காட்டு யானைகள் அங்கு தங்கி இருந்தவர்களை தாக்கியுள்ளது.
இதன்போது அடியார்கள் கூச்சலிட அங்கு வந்த இரானுவத்தினர் யானைகளை விரட்டி கதிர்காம யாத்திரையர்களை காப்பாற்றியுள்ளனர்.
இரண்டு பெண்கள் உட்பட ஜந்து அடியார்கள் பாதிக்கப்பட்டதுடன் உடனடியாக இரானுவத்தினரின் உதவியுடன் உகந்தை குமண எனும் இடத்திற்கு எடுத்து வரப்பட்டு அங்கிருந்து வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டனர்.
இவ்வாறு காயமடைந்த இரண்டு பெண்களில் ஒரு பெண்(30) பொத்துவில் வைத்தியசாரையிலும், மற்றய வயதான பெண்(60) பானமை வைத்தியசாலையிலும் ஒரு ஆண்(55) பொத்துவில் ஆதார வைத்தியசாலையிலும் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு யானை தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு பழுகாமம் மற்றும் முகத்துவாரம் பிரதேசங்களைச் சேர்ந்தவரக்ளாவர்
No comments:
Post a Comment