News by - Kailayapillai Kirushanthan
திருக்கோவில் பொலிஸ்ப் பிரிவுக்குட்பட்ட சாகாமம் குளத்தின் அருகாமையில் மீனவர்கள் இருந்த வேளை இன்று 4ம் திகதி திங்கட்கிழமை அதிகாலை யானை தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் ஒருவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாகாமம் குளத்தில் மீன் பிடிப்பதை கண்காணிக்கும் வேலையில் நேற்று இரவு ஜந்து பேர் கொண்ட மீனவர் குழுவினர் காவலுக்காக சென்றிருந்த வேளை இவர்களை யானை விரட்டியுள்ளது.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிவராசா சுதாகரன் வயது 36 காயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
No comments:
Post a Comment