2017ஆம் ஆண்டுக்கான உள்ளுராட்சி மன்றங்களின் வரவு செலவுத்திட்டத்தில் மக்கள் பிரச்சினைகள் உள்வாங்கத் திட்டம்
அம்பாறை மாவட்டத்தின் தமிழ் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழ்கின்றபிரதேசங்களில் காணப்படும் அடிப்படை பிரசினைகளை இனம் கண்டு அவற்றிற்குதீர்வு காணும் நோக்குடன் அம்பாறை மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கம்உள்ளுராட்ச்சி மன்றங்களின் செயலாளர்கள் மற்றும் ஊடகங்களுக்கான விசேடசந்திப்பினை இன்று (14) மாவட்ட இனைப்பாளார் எஸ் இஷத்தீன் தலமையில் அட்டாளைச்சேனை டி.எப்.சி.கேட்போர்கூடத்தில் நாடாத்தியது
இவ் நிகழ்வானது கிராம மட்ட மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து மக்களிடம் இருந்து கிடைக்கும் கருத்துக்களின் அடிப்படையில் அதற்கான தீர்வுத்திட்டம் ஒன்றினை தயாரித்து அரச அதிகாரிகளுக்கும் அரசியல் வாதிகளுக்கும் சமுக தலைவர்களுக்கும் கையளிப்பது இதன் பிரதான நோக்கமாக அமைந்திருந்தது
எதிர்வரும் 2017ஆம் ஆண்டுக்கான உள்ளுராட்சி மன்றங்களின் வரவு செலவுத்திட்டத்தில் இவ் முன் மொழிவுகளை உள்வாங்கச் செய்து அதனை நடைமுறைப்படுத்த மாவட்டத்தின் செயற்பாட்டு பிரதேசங்களான ஆலையடிவேம்பு ,திருக்கோவில் , அட்டாளைச்சேனை , நகர,பிரதேச உள்ளுராட்சி மன்றங்களைச் சேர்ந்த ,பிரதேச சபை செயலாளர்கள் ,உள்ளுராட்ச்சி மன்ற முன்னைனாள் உறுப்பினர்கள் , பிரதேச செயலக செயலாளர்கள் பொலிஸ் அதிகாரிகள் , போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் துறைசார் முக்கியஸ்தர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர்
தேசிய மீனவ ஒத்துளைப்பு இயக்கத்தின் கீழ் இயங்கும் அம்பாறை மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஊடாக அரச நிறுவனங்களுக்கும் மக்களுக்கும் இடையேயான உறவினை வளர்ப்பதற்கு உதவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது
இவ் நிகழ்வில் எடுக்கப்பட்ட தீர்மானங்களாக 03 பிரதேச செயலாளர் பிரிவுகளில் மிக முக்கியமாக அடையாளப்படுத்தப்பட்ட பிரச்சினைகளுக்கு முன்னுரின்மையின் அடிப்படையில் தீர்வுகான நடவடிக்கை எடுக்கப்படும் என வருகை தந்திருந்த அரச பிரதிநிதிகள் , ,உள்ளுராட்சி மன்ற செயலாளர்கள் தெரிவித்ததுடன் தற்போது கிராம மட்டத்தில் மது போதை பொருள் பாவனையினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்
No comments:
Post a Comment