Monday, 31 March 2014

நடைபெற்று முடிந்த கோளாவில் கிராமத்திற்கான நடமாடும் சேவை.

வழமைபோன்றே இந்நடமாடும் சேவையினையும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் காலை 9.00 மணியளவில் தேசியக்கொடியேற்றி ஆரம்பித்துவைத்தார். இறைவணக்கத்தின் பின்னர் கோளாவில் – 2 கிராமசேவகர் பிரிவுக்கான கிராமசேவை உத்தியோகத்தர் வரவேற்புரையாற்றியதைத் தொடர்ந்து மூன்று கிராமசேவகர் பிரிவுகளுக்குமான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தத்தமது பிரதேசம் தொடர்பான விளக்கவுரையினை வழங்கினர். அதன் பின்னர் குறித்த நடமாடும் சேவையினை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும்முகமாக பிரதேச செயலாளரது ஆரம்ப உரை இடம்பெற்றது.

அதனைத்தொடர்ந்து மேடையேற்றப்பட்ட கலை, கலாசார நிகழ்வுகளில் தமது திறமைகளை வெளிப்படுத்திய சிறுவர்களுக்கு பிரதேச செயலாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், நிருவாக உத்தியோகத்தர், கிராமசேவை உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் மற்றும் உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் பரிசில்களை வழங்கிவைத்தார்கள். அத்துடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுகசேவைகள் பிரிவினால் முதியோருக்கான அடையாள அட்டைகளும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நடமாடும் சேவையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்திப் பிரிவுக்கான உத்தியோகத்தர்களுடன் பொலிஸ் மற்றும் ஏனைய அரச பொதுத்துறை சார்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்று கோளாவில் கிராம மக்களுக்கான சேவைகளை வழங்கினர்.

மேலும் கிராமத்திற்குக் கிராமம் நடமாடும் சேவையின் பனங்காடு மற்றும் சின்னப்பனங்காடு கிராமசேவகர் பிரிவுகளுக்கான அடுத்த இணைந்த நடமாடும் சேவையானது எதிர்வரும் 01-04-2014, செவ்வாய்க்கிழமை சின்னப்பனங்காடு கிராமிய அபிவிருத்திச் சங்க (RDS) கட்டடத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பனங்காடு கிராமசேவகர் பிரிவுக்கான நடமாடும் சேவை நிலைய மற்றும் திகதி மாற்றம் என்பன தொடர்பான அறிவித்தல்"


பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 'கிராமம் கிராமமாக – வீடு வீடாக' என்ற அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் அடிப்படையில் பனங்காடு கிராமசேவகர் பிரிவுக்கான நடமாடும் சேவை நடைபெறவுள்ள இடமும் திகதியும் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தவகையில் அல்லாது வேறு தினத்திலும் வேறிடத்திலும் நடாத்தப்படவுள்ளது.

எதிர்பாராத சில தவிர்க்கமுடியாத காரணங்களால் மேற்குறிப்பிட்ட பனங்காடு கிராமசேவகர் பிரிவுக்கான நடமாடும் சேவையானது அடுத்தநாள், அதாவது 01-04-2014, செவ்வாய்க்கிழமை சின்னப்பனங்காடு RDS கட்டடத்தில் நடாத்தப்படவுள்ள சின்னப்பனங்காடு கிராமசேவகர் பிரிவுக்கான நடமாடும் சேவையுடன் இணைந்தவகையில் நடாத்தப்படும் என்பதனைப் பனங்காடு கிராமப் பொதுமக்கள் அனைவரது கவனத்திற்கும் அறியத்தருகின்றோம்.

இம்மாற்றங்கள் தொடர்பில் ஏற்படும் அசெளகரியங்களுக்காக வருந்துகின்றோம்.

- பிரதேச செயலகம், ஆலையடிவேம்பு.

Wednesday, 26 March 2014

சைவசமயப் பரீட்சை சாதனையாளர்கள் பாராட்டு விழா..

ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமண்றம் மாவட்டமட்டத்தில் நடாத்திய சைவசமயப் பரீட்சை சாதனையாளர்கள் பாராட்டு விழாவில்(23ஞாயிறு)
Displaying SN851636.jpg
Displaying SN851666.jpg
Displaying SN851681.jpg
Displaying SN851689.jpg

 அதிதியாக கலந்துகொண்ட கிழக்கு இந்துப்பேரவைத்தலைவர் சி.யோகேஷ்வரன்(பா.உ) உரையாற்றுவதனையும் ரிஷிகேசத்தில் இருந்து வருகைதந்த ஸ்ரீமத் சுவாமி நித்தியானந்த சரஸ்வதி மகராஜ் மாணவிக்கு பரிசில் சான்றுப்பத்திரம் வழங்குவதனையும் அருகில் மண்றத்தலைவர் வே.சந்திரசேகரம் செயலாளர்.ஸ்ரீ.மணிவன்னன் மாவட்டச்செயலக உள்ளகக்கனக்காளர் சி.கனகரெட்னம் ஆகியோர்களையும் கலந்துகொண்ட பெற்றோர்களையும் கானலாம். 

Tuesday, 25 March 2014

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற மாபெரும் சிரமதானம்

ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள நாவற்காடு கிராமத்தினைச் சேர்ந்த பொதுமக்களால் ஒன்றிணைந்து மேற்கொள்ளப்பட்ட மாபெரும் சிரமதான நிகழ்வானது இன்று 25-03-2014, செவ்வாய்க்கிழமை காலை 7.00 மணி தொடக்கம் ஆலையடிவேம்பு பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்றது.

குறித்த கிராமத்திற்குப் பொறுப்பான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.சமனந்தகுமார, கிராமசேவை உத்தியோகத்தர் கே.பிரதிபா மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ரி.அழகரெட்ணம் ஆகியோரது ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இச்சிரமதான நிகழ்வில் பெருமளவிலான நாவற்காடு கிராமப் பொதுமக்கள், குறிப்பாகப் பெண்கள் பங்கெடுத்து பிரதேச செயலக வளாகத்தில் ஒதுக்குப்புறமாகவும் சுற்றுமதிலை அண்டியும் காணப்பட்ட பற்றைக்காடுகள், முட்செடிகள் என்பனவற்றினை வெட்டியகற்றியதோடு அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை மற்றும் இதர மரக்கறிப் பயிர்களிடையே காணப்பட்ட களைகள் மற்றும் புற்பூண்டுகளையும் செருக்கிச் சுத்தப்படுத்தினர்.

இச்சிரமதான முடிவில் சேகரிக்கப்பட்ட குப்பை கூழங்கள் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் கழிவுகள் சேகரிக்கும் வாகனத்திடம் கையளிக்கப்பட்டன.

எமது ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இம்மாபெரும் சிரமதானத்தில் தமது சிரமம் பாராது பங்கெடுத்த அனைத்துப் பொதுமக்களுக்கும் பிரதேச செயலாளரின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அக்கரைப்பற்றில் இடம்பெற்ற, வன்முறையற்ற தொடர்பாடலுக்கான பயிற்சிக் கருத்தரங்கு..


(ஏ.ஜி.ஏ.கபூர், (எம்.ஏ.றமீஸ்)
வன்முறையற்ற தொடர்பாடலுக்கான 02 நாள் பயிற்சி நெறியொன்று நேற்று முன்தினம் 14 திகதி வெள்ளிக்கிழமை, 15ம் திகதி சனிக்கிழமை ஆகிய தினங்களில் அக்கரைப்பற்று பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

அட்டாளைச்சேனை ருவிஷன் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப் பயிற்சி நெறி அமைப்பின் உப தலைவரும் சுனாமி சம்பந்தமான மத்தியஸ்த சபையின் முன்னாள் தலைவருமான ஏ.எல்.கே.முஹம்மத் தலைமையில் நடைபெற்றது.

கொழும்பு தொடர்பாடலுக்கான மத்திய பயிற்சி நிலையத்தின் அனுசரனையுடன் நடைபெற்ற இப் பயிற்சி நெறியில் கொழும்பு தொடர்பாடலுக்கான மத்திய பயிற்சி நிலையத்தின் சிரேஸ்ட வளவாளர்களான பி.பெனிக்நஸ், எம்.பஸால், பி.ரமணிஷா ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சிகளைச் சிறப்பாக நடாத்தினார்கள்
ஐந்து படிமுறைகளைக் கொண்ட இப் பயிற்சி நெறியின் முதலாவது 02நாள் பயிற்சி நெறியில் அக்கரைப்பற்று,அட்டாளைச்சேனை, திருக்கோவில் ஆகிய மத்தியஸ்த சபையின் தலைவர் உட்பட தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள், தெரிவு செய்யப்பட்ட சமுக நிறுவனங்களின் பிரதிநிதிகள், சமயத் தலைவர்கள் ஆகியோருடன் கல்முனை பௌத்த விகாரையின் அதிபர் வண.ரண்முத்துகல சங்கரத்ன தேரர் முதலியோர்கள் கலந்து கொண்டனர்.

இப் பயிற்சி நெறியினை அட்டாளைச்சேனை ருவிஷன் அமைப்பின் உப தலைவருமான ஏ.எல்.கே.முஹம்மத் அவர்களுடன் இணைந்து அதன் அமைப்பாளர்களான ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர் எம்.ஐ.ரவூப், மௌலவி ஏ.எம்.ரம்ஸி ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.










 0  0


சின்னமுகத்துவாரம் கிராமசேவகர் பிரிவுக்கான நடமாடும் சேவை .....

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ‘கிராமம் கிராமமாக – வீடு வீடாக’ எனும் கிராம மக்களுக்கான உபகார வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சின்னமுகத்துவாரம் கிராமசேவகர் பிரிவுக்கான நடமாடும் சேவையானது இன்று 24-03-2014, திங்கட்கிழமை சின்னமுகத்துவாரம், சென் ஜோன் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

வழமைபோன்றே இந்நடமாடும் சேவையினையும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் காலை 9.00 மணியளவில் தேசியக்கொடியேற்றி ஆரம்பித்துவைத்தார். இறைவணக்கத்தின் பின்னர் சின்னமுகத்துவாரம் கிராமசேவகர் பிரிவுக்கான கிராமசேவை உத்தியோகத்தர் வரவேற்புரையாற்றியதைத் தொடர்ந்து அக்கிராமசேவகர் பிரிவுக்கான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் தனது பிரதேசம் தொடர்பான விளக்கவுரையினை வழங்கினார். அதன் பின்னர் குறித்த நடமாடும் சேவையினை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும்முகமாக பிரதேச செயலாளரது ஆரம்ப உரை இடம்பெற்றது.

அதனைத்தொடர்ந்து மேடையேற்றப்பட்ட கலை, கலாசார நிகழ்வுகளில் தமது திறமைகளை வெளிப்படுத்திய சிறார்களுக்கு பிரதேச செயலாளர், கிராமசேவை உத்தியோகத்தர் உட்பட்ட அதிதிகளால் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நடமாடும் சேவையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்திப் பிரிவுக்கான உத்தியோகத்தர்களுடன் பொலிஸ் மற்றும் ஏனைய அரச பொதுத்துறை சார்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்று சின்னமுகத்துவாரம் கிராமசேவகர் பிரிவுப் பொதுமக்களுக்கான சேவைகளை வழங்கினர்.

Saturday, 22 March 2014

தேசிய சுகாதார வாரத்தை முன்னிட்டு ...


(ஏ.ஜி.ஏ.கபூர்)
நாடளாவிய ரீதியில் இம்மாதம் 10ம் திகதி முதல் 16ம் திகதிவரை சுகாதார அமைச்சினால் அனுஷ்டிக்கப்படுகின்ற தேசிய சுகாதார வாரத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று-12ம் பிரிவு சிவில் பாதுகாப்புக் குழுவும், கிராம அபிவிருத்தி சங்கமும் இணைந்து நடாத்திய வீதி விபத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு அக்கரைப்பற்று உப தபாலக வீதியில் நடைபெற்றது.

அக்கரைப்பற்று-12ம் பிரிவு சிவில் பாதுகாப்புக் குழுத் தலைவர் தலைமையில் நடைபெற்ற இவ் விழிப்புணர்வுக் கருத்தரங்கில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி யூ.எல்.ஹாஜா மொஹிதீன், கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் எம்.இப்றாஹிம், பள்ளிவாயல் செயலாளர் எம்.ஜலால்தீன், சிவில் பாதுகாப்புக் குழுக்ளுக்குப் பொறுப்பான பொலிஸ் உத்தியோகத்தர் எம்.அப்துல்லா,பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் எம்.பாரிஸ், அக்கரைப்பற்று-12ம் பிரிவு; செயலாளர் எம்.ஜி.எம். பஹ்றுதின் மௌலவி வை.எல்.எம்.முஸ்தபா ஆகியோர் கலந்து கொண்டனா்

சமகால வீதி விபத்துக்கள் சம்பந்தமாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி யூ.எல்.ஹாஜா மொஹிதீன் வழங்கியதோடு,வீதி விபத்துக்கள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது..









Friday, 21 March 2014

நாவற்காடு கிராமசேவகர் பிரிவுக்கான நடமாடும் சேவை....

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ‘கிராமம் கிராமமாக – வீடு வீடாக’ எனும் கிராம மக்களுக்கான உபகார வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நாவற்காடு கிராமசேவகர் பிரிவுக்கான நடமாடும் சேவையானது இன்று 21-03-2014, வெள்ளிக்கிழமை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

வழமைபோன்றே இந்நடமாடும் சேவையினையும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் காலை 9.00 மணியளவில் தேசியக்கொடியேற்றி ஆரம்பித்துவைத்தார். தொடர்ந்து பிரதேச செயலாளரது உத்தியோகபூர்வ ஆரம்ப உரை இடம்பெற்றதுடன் கிராமசேவை உத்தியோகத்தர் பி.பிரதீபா வரவேற்புரையாற்றியதுடன், நாவற்காடு கிராமசேவகர் பிரிவுக்கான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.சமனந்தகுமார தனது பிரதேசம் தொடர்பான விளக்கவுரையினை வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து மேடையேற்றப்பட்ட கலை, கலாசார நிகழ்வுகளில் தமது திறமைகளை வெளிப்படுத்திய சிறார்களுக்கு பிரதேச செயலாளர், கிராமசேவை உத்தியோகத்தர் உட்பட்ட அதிதிகளால் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன. இதில் சிறப்பம்சமாக அதிதிகள் தலைமையில் நாவற்காடு கிராமசேவகர் பிரிவிலிருந்து கடந்த வருடத்தில் நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் கணித, விஞ்ஞானப் பிரிவுகளில் தோற்றி சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்த மற்றும் தரம் – 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

அதனைத்தொடர்ந்து குறிப்பிட்ட கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த சமுர்த்திப் பயனாளிகளுக்கான உதவிகள் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நடமாடும் சேவையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்திப் பிரிவுக்கான உத்தியோகத்தர்களுடன் பொலிஸ் மற்றும் ஏனைய அரச பொதுத்துறை சார்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்று நாவற்காடு கிராமசேவகர் பிரிவு பொதுமக்களுக்கான சேவைகளை வழங்கினர். அதேபோன்று பெருமளவிலான மக்களும் திரண்டுவந்து தமக்கான சேவைகளை இங்கு பெற்றுக்கொண்டனர்.

மேலும் கிராமத்திற்குக் கிராமம் நடமாடும் சேவையின் சின்னமுகத்துவாரம் கிராமசேவகர் பிரிவிற்கான அடுத்த நடமாடும் சேவையானது எதிர்வரும் 24-03-2014, திங்கட்கிழமை சின்னமுகத்துவாரம், சென் ஜோன் வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

"நடமாடும் சேவை நிலையங்கள் மற்றும் திகதிகள் மாற்றம் என்பன தொடர்பான அறிவித்தல்"

  1. பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 'கிராமம் கிராமமாக – வீடு வீடாக' என்ற அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் அடிப்படையில் கோளாவில் – 1, கோளாவில் – 2, கோளாவில் – 3 மற்றும்கண்ணகிகிராமம் – 1 ஆகிய கிராமசேவகர் பிரிவுகளுக்கான நடமாடும் சேவைகள் நடைபெறவுள்ள இடங்களும் திகதிகளும் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தவகையில் அல்லாது வேறிடங்களுக்கும் வேறு திகதிகளுக்கும் மாற்றப்பட்டுள்ளன.

    எதிர்பாராத சில தவிர்க்கமுடியாத காரணங்களால் மேற்குறிப்பிட்ட கிராமசேவகர் பிரிவுகளுக்கான நடமாடும் சேவைகள் நடாத்தப்படவுள்ள புதிய இடங்களும் மாற்றப்பட்டுள்ள திகதிகளும் தொடர்பான விபரங்கள் இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன்படி புதிய அட்டவணைப்படியே மேற்குறிப்பிட்ட கிராமங்களுக்கான நடமாடும் சேவைகள் நடாத்தப்படும் என்பதனைப் பொதுமக்கள் அனைவரது கவனத்திற்கும் அறியத்தருகின்றோம்.

    இம்மாற்றங்கள் தொடர்பில் ஏற்படும் அசெளகரியங்களுக்காக மிக வருந்துகின்றோம்.

    - பிரதேச செயலகம், ஆலையடிவேம்பு.
    Alayadivembu Divisional Secretariat's photo.


ஆலையடிவேம்பு கிராமசேவகர் பிரிவுக்கான நடமாடும் சேவை”


பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ‘கிராமம் கிராமமாக – வீடு வீடாக’ அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஆலையடிவேம்பு கிராமசேவகர் பிரிவுக்கான நடமாடும் சேவையானது இன்று 20-03-2014, வியாழக்கிழமை ஆலையடிவேம்பு, திருநாவுக்கரசு வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இந்நடமாடும் சேவையினை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் காலை 9.00 மணியளவில் தேசியக்கொடியேற்றி ஆரம்பித்துவைத்தார். தொடர்ந்து பிரதேச செயலாளர் மற்றும் கிராமசேவை உத்தியோகத்தர் ஆகியோர் உரையாற்றியதுடன், ஆலையடிவேம்பு கிராமசேவகர் பிரிவுக்கான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் தனது பிரதேசம் தொடர்பான விளக்கவுரையினை வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து மேடையேற்றப்பட்ட கலை, கலாசார நிகழ்வுகளில் தமது திறமைகளை வெளிப்படுத்திய சிறுவர்களுக்கு பிரதேச செயலாளர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர், கிராமசேவை உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர், உதவிப் பொலிஸ் பரிசோதகர் மற்றும் பாடசாலை அதிபர் ஆகியோர் பரிசில்களை வழங்கிவைத்தார்கள்.

இந்நடமாடும் சேவையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்திப் பிரிவுக்கான உத்தியோகத்தர்களுடன் பொலிஸ் மற்றும் ஏனைய அரச பொதுத்துறை சார்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்று ஆலையடிவேம்பு கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த பொதுமக்களுக்கான சேவைகளை வழங்கினர்.

மேலும் கிராமத்திற்குக் கிராமம் நடமாடும் சேவையின் நாவற்காடு கிராமசேவகர் பிரிவிற்கான அடுத்த நடமாடும் சேவையானது எதிர்வரும் 21-03-2014, வெள்ளிக்கிழமை (அதாவது நாளை) ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.