- பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 'கிராமம் கிராமமாக – வீடு வீடாக' என்ற அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் அடிப்படையில் கோளாவில் – 1, கோளாவில் – 2, கோளாவில் – 3 மற்றும்கண்ணகிகிராமம் – 1 ஆகிய கிராமசேவகர் பிரிவுகளுக்கான நடமாடும் சேவைகள் நடைபெறவுள்ள இடங்களும் திகதிகளும் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தவகையில் அல்லாது வேறிடங்களுக்கும் வேறு திகதிகளுக்கும் மாற்றப்பட்டுள்ளன.
எதிர்பாராத சில தவிர்க்கமுடியாத காரணங்களால் மேற்குறிப்பிட்ட கிராமசேவகர் பிரிவுகளுக்கான நடமாடும் சேவைகள் நடாத்தப்படவுள்ள புதிய இடங்களும் மாற்றப்பட்டுள்ள திகதிகளும் தொடர்பான விபரங்கள் இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன்படி புதிய அட்டவணைப்படியே மேற்குறிப்பிட்ட கிராமங்களுக்கான நடமாடும் சேவைகள் நடாத்தப்படும் என்பதனைப் பொதுமக்கள் அனைவரது கவனத்திற்கும் அறியத்தருகின்றோம்.
இம்மாற்றங்கள் தொடர்பில் ஏற்படும் அசெளகரியங்களுக்காக மிக வருந்துகின்றோம்.
- பிரதேச செயலகம், ஆலையடிவேம்பு.
Friday, 21 March 2014
"நடமாடும் சேவை நிலையங்கள் மற்றும் திகதிகள் மாற்றம் என்பன தொடர்பான அறிவித்தல்"
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment