Saturday, 8 March 2014


(எம்.ஏ.றமீஸ்)
அக்கரைப்பற்று-கல்முனை பிரதான வீதியின் நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தில் இன்று(08) அதிகாலை நிகழ்ந்த வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலியானதுடன், வாகனத்தில் பயணித்த சாரதி பலத்த காயங்களுடன் நிந்தவூர் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

அக்கரைப்பற்றைச் சேர்ந்த வர்த்தகர் இப்றாஹிம் லெவ்வை அப்துல் மஜீட்(48) என்பவரே விபத்தில் பலியானார். வுpயாபார நிமித்தம் தம்புள்ளையில் இருந்து மரக்கறி மற்றும் முட்டை போன்றவற்றை கென்ரர் ரக லொறியில் ஏற்றிக்கொண்டு அக்கரைப்பற்றை நோக்கி வந்தபோது அதிகாலை 12 மணியளவில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.
வாகனத்ததைச் செலுத்தி வந்த வெள்ளத்தம்பி றஹீம்(26) என்பவரே நிந்தவூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். வேகக் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதுண்டதனால் இவ்விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. விபத்தின்போது வாகனத்தில் பயணித்த இருவரும் அக்கரைப்பற்று டீன்ஸ் வீதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






No comments: