பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 'கிராமம் கிராமமாக – வீடு வீடாக' என்ற அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் அடிப்படையில் எதிர்வரும் 17-03-2014, திங்கட்கிழமை அக்கரைப்பற்று - 9 கிராமசேவகர் பிரிவுக்காக ஸ்ரீ தம்மரதன சிங்கள வித்தியாலயத்தில் நடைபெறவிருந்த நடமாடும் சேவையானது ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தவாறு அன்றைய தினத்தில் நடைபெறமாட்டாது.
தவிர்க்கமுடியாத சில காரணங்களால் குறிப்பிட்ட நடமாடும் சேவையானது எதிவரும் 14-03-2014, வெள்ளிக்கிழமை, அதாவது நாளை காலை 9.00 மணி தொடக்கம் அதே பாடசாலையில் அக்கரைப்பற்று – 8/3 கிராமசேவகர் பிரிவுக்காக நடைபெறவுள்ள நடமாடும் சேவையுடன் இணைந்தவகையில் முன்கூட்டியே நடாத்தப்படும் என்பதைக் குறிப்பிட்ட கிராமசேவகர் பிரிவில் வசிக்கும் அனைத்துப் பொதுமக்களுக்கும் அறியத்தருவதுடன், அக்கரைப்பற்று - 9 கிராமசேவகர் பிரிவு பொதுமக்கள் அனைவரும் அன்றையதினம் மேற்குறிப்பிட்ட பாடசாலையில் தமக்கான சேவைகளைப் பெற்றுக்கொள்ளமுடியும் என்பதனையும் அறியத்தருகின்றோம்.
இந்த மாற்றம் தொடர்பில் ஏற்படும் அசெளகரியங்களுக்காக வருந்துகின்றோம்.
No comments:
Post a Comment