Thursday, 13 March 2014

மின்வெட்டு தொடர்பான முன்னறிவித்தல்...

கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இன்று 12-03-2014 தொடக்கம் 31-03-2014 வரையான காலப்பகுதியில் மின்சாரத் தொகுதிகளின் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப்பணிகளின் பொருட்டு மேற்கொள்ளப்படவுள்ள பகல்நேர மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்கள் இலங்கை மின்சார சபையின் அம்பாறை பிராந்திய மின் பொறியியலாளர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.
Photo: “மின்வெட்டு தொடர்பான முன்னறிவித்தல்”

கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இன்று 12-03-2014 தொடக்கம் 31-03-2014 வரையான காலப்பகுதியில் மின்சாரத் தொகுதிகளின் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப்பணிகளின் பொருட்டு மேற்கொள்ளப்படவுள்ள பகல்நேர மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்கள் இலங்கை மின்சார சபையின் அம்பாறை பிராந்திய மின் பொறியியலாளர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி அம்பாறை பிரதேச மின் பொறியியலாளர் பிரிவிலுள்ள அக்கரைப்பற்று பாவனையாளர் சேவை நிலையத்திற்குட்பட்ட தம்பிலுவில், திருக்கோவில், விநாயகபுரம், சாகாமம், காயத்திரி கிராமம், மண்டானை மற்றும் சின்னமுகத்துவாரம் ஆகிய பிரதேசங்களில் எதிர்வரும் 22-03-2014, சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் பி.ப. 5.00 மணி வரையிலான 8 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. 

இதுதொடர்பில் கிழக்கு மாகாணத்தின் ஏனைய பிரதேசங்களிலுள்ள மின் பாவனையாளர்கள் தத்தமது பிரதேசங்களில் அமுல்படுத்தப்படவுள்ள மின்வெட்டு தொடர்பான விபரங்களை குறிப்பிட்ட அலுவலகத்தின் தொலைபேசி இலக்கங்களான 063 2222078 மற்றும் 063 2222387 என்பவற்றுக்கு அழைப்பதன் மூலம், அல்லது இன்றைய (12-03-2014, புதன்கிழமை) தினகரன் பத்திரிகையின் 17 மற்றும் 18 ஆம் பக்கங்களைப் பார்வையிடுவதன் மூலம் அறிந்துகொள்ளமுடியும்.

இம்மின்வெட்டு தொடர்பான முன்னறிவித்தலானது கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து மின் பாவனையாளர்களையும் சென்றடையும் வகையிலும், இதன்மூலம் ஏற்படக்கூடிய அசெளகரியங்களைக் குறைத்துக்கொள்ளும் வகையிலும் இயன்றவரையில் இத்தகவலை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

No comments: