Friday, 14 March 2014

அக்கரைப்பற்று – 8/2 கிராமசேவகர் பிரிவுக்கான நடமாடும் சேவை”



பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ‘கிராமம் கிராமமாக – வீடு வீடாக’ அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள அக்கரைப்பற்று – 8/2 கிராமசேவகர் பிரிவுக்கான நடமாடும் சேவையானது இன்று 13-03-2014, வியாழக்கிழமை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கணக்காளர் எம்.ஐ.எம்.முஸ்தபா காலை 9.00 மணியளவில் தேசியக்கொடியேற்றி இந்நடமாடும் சேவையினை ஆரம்பித்துவைத்தார். தொடர்ந்து உதவித் திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் கிராமசேவை உத்தியோகத்தர் ஆகியோர் உரையாற்றியதுடன், அக்கரைப்பற்று – 8/2 பிரிவுக்கான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் தமது பிரதேசம் தொடர்பான விளக்கவுரையினை வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து மேடையேற்றப்பட்ட கலை, கலாசார நிகழ்வுகளில் தமது திறமையினை வெளிப்படுத்திய சிறார்கள் மற்றும் இளைஞக்கு உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.ரி.கிருபைராஜா, நிருவாக உத்தியோகத்தர் கே.எல்.ஏ.எம்.ரஹ்மத்துல்லா, கிராமசேவை உத்தியோகத்தர் பி.ஹிரிஷாந்த், உதவிப் பொலிஸ் பரிசோதகர் வை.விஜயராஜா மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.இசற்.ஜாரியா பீவி ஆகியோர் பரிசில்களை வழங்கிவைத்தார்கள்.

இந்நடமாடும் சேவையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்திப் பிரிவுக்கான உத்தியோகத்தர்களுடன் பொலிசார் உட்பட ஏனைய அரச பொதுத்துறை சார்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்று பொதுமக்களுக்கான சேவைகளை வழங்கினர்.

மேலும் கிராமத்திற்குக் கிராமம் நடமாடும் சேவையின் அக்கரைப்பற்று – 8/3 மற்றும் அக்கரைப்பற்று – 9 கிராமசேவகர் பிரிவுகளுக்கான அடுத்த இணைந்த நடமாடும் சேவையானது எதிர்வரும் 14-03-2014, வெள்ளிக்கிழமை (அதாவது நாளை) அக்கரைப்பற்று – 9, ஸ்ரீ தம்மரதன சிங்கள வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 (24 photos)

No comments: