பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 'கிராமம் கிராமமாக – வீடு வீடாக' என்ற அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் அடிப்படையில் எதிர்வரும் 18-03-2014, செவ்வாய்க்கிழமை வாச்சிக்குடா கிராமசேவகர் பிரிவுக்கான நடமாடும் சேவை நடைபெறவுள்ள இடமானது ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தவாறு வாச்சிக்குடா RDS கட்டடத்தில் நடைபெறமாட்டாது.
மற்றொரு தவிர்க்கமுடியாத காரணத்தால் குறிப்பிட்ட நடமாடும் சேவையானது அக்கரைப்பற்று – 7/2 கிராமசேவகர் பிரிவிலுள்ள சுவாமி விபுலானந்தா மாணவர் இல்லத்தில் அதே நாளில் (18-03-2014, செவ்வாய்க்கிழமை) நடாத்தப்படும் என்பதை வாச்சிக்குடா கிராமசேவகர் பிரிவில் வசிக்கும் அனைத்துப் பொதுமக்களுக்கும் அறியத்தருவதுடன், மேற்குறிப்பிட்ட இடத்தில் தங்களுக்கான அனைத்து சேவைகளையும் அன்றையதினம் பெற்றுக்கொள்ளமுடியும் என்பதனையும் அறியத்தருகின்றோம்.
இந்த மாற்றம் தொடர்பில் ஏற்படும் அசெளகரியங்களுக்கு வருந்துகின்றோம்.
No comments:
Post a Comment