அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் டி அல்விஸ் அவர்களின் அதீத முயற்சியின் பயனாக, NISD எனப்படும் தேசிய சமுக அபிவிருத்தி நிறுவனத்தினால் இதுவரைகாலமும் கொழும்பு, அனுராதபுரம் போன்ற பிராந்திய மத்திய நிலையங்களில் அரச ஊழியர்களுக்காக நடாத்தப்பட்டு வந்த ‘உளவளத்துறை டிப்ளோமா’ பாடநெறி, தற்போது அம்பாறையில் அமைக்கப்பட்டுள்ள அந்நிறுவனத்தின் புதிய பயிற்சி நிலையத்தில் கடந்த 01.09.2013 முதல் தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இக் கற்கைநெறி தொடர்பாக அம்பாறை மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு அறிவூட்டுவதற்கும், ஆர்வமுடையோரைப் புதிதாக இணைத்துக்கொள்வதற்குமான விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் நவரெட்ணராஜா கலையரங்கில் 04.09.2013, புதன்கிழமையன்று நடைபெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் சமுக சேவைகள் பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் அவர்கள் தலைமை தாங்கினார். தேசிய சமுக அபிவிருத்தி நிறுவனத்தின் சார்பில் அதன் பயிற்றுவிப்பாளர் ஜனாப்.உபைதுல்லாஹ் அவர்களால் இப்பாடநெறி தொடர்பாக அறிவூட்டல்கள் வழங்கப்பட்டன.
இக்கருத்தரங்கில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அனைத்து ஊழியர்களும் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment