Wednesday, 18 September 2013

13 வயது சிறுமியை வல்லுறவுக்குட்படுத்தியவர் கைது


அக்கரைப்பற்று, ஆலையடிவேம்புப் பிரதேசத்தில் 13 வயதுச் சிறுமி ஒருவரை வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 16 வயதான சிறுவன் ஒருவனை  நேற்று சனிக்கிழமை மாலை கைதுசெய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட 16 வயதான   இந்தச்  சிறுவன்,  இந்தச் சிறுமியை நேசித்து வந்துள்ளதாகவும் இவர் கடந்த இரு தினங்களாக இந்தச் சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்தியததாகவும்  இந்தச் சிறுமியின் பெற்றோர், பொலிஸில் செய்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து  சந்தேக நபரை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான  நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 

No comments: