Tuesday, 10 September 2013

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் டெங்கு ஒழிப்பு சிரமதான வேலைத்திட்டம்


(எஸ்.ஜே.பிரேம் ஆனந்த்)


ஆலையடிவேம்பு பிரதேச ரீதியாக முன்னெடுக்கப்பட்டுள்ள பரந்தளவிலான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் கடந்த 06.09.2013, வெள்ளிக்கிழமை அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வீ.ஜெகதீசன் ஆகியோரின் பங்குபற்றலுடன் அக்கரைப்பற்று – 7/4, வீரமாகாளி அம்மன் ஆலய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பிரதேச செயலாளரைத் தலைவராகவும், அந்தந்தப் பிரதேசங்களுக்குப் பொறுப்பான கிராமசேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராமிய அபிவிருத்திச் சங்க, கிராமிய மாதர் அபிவிருத்திச் சங்க, சிவில் பாதுகாப்புக் குழு உறுப்பினர்களை உள்ளடக்கிய இப் பரந்தளவிலான சிரமதான வேலைத்திட்டத்தின் முதலாம் கட்டப் பணிகளே இவ்வாறு ஆரம்பித்து வைக்கப்பட்டன.
எதிர்வரும் நாட்களில் தொடங்கவுள்ள பருவ மழைக்காலத்திற்கு முன்னதாக ஆலையடிவேம்பு பிரதேசத்தில் காணப்படும் டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய இடங்களைச் சுத்தப்படுத்தும் நோக்குடனான சிரமதான வேலைத்திட்டங்கள் அன்றைய தினத்தில் கவடாப்பிட்டி பல்தேவைக் கட்டட வளாகம், பனங்காடு மீனவர் சங்கக் கட்டட வளாகம், நாவற்காடு மகாசக்தி பாலர் பாடசாலை வளாகம் மற்றும் கோளாவில் – 3 மாரியம்மன் ஆலய சுற்றுப்புறம் ஆகிய இடங்களில் முன்னெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.





 
 

No comments: