Friday, 13 September 2013

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் விசேட பூசை நிகழ்வு.


(உ.உதயகாந்த்)

இலங்கை பொலிஸ் சேவையின் 147 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு பொலிஸ் திணைக்கள பொலிஸ்மா அதிபர் என்.இளங்ககோனிற்கும், பொலிஸ் திணைக்களத்திற்கும்  ஆசி வேண்டி ஆலையடிவேம்பு வம்மியடிப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூசை நிகழ்வினை அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜனாப் ஹாஜா முஹைதீன் தலைமையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு  2013.09.03 ஆம் திகதி செவ்வாய்கிழமை  மிகவும் சிறப்பாக நடாத்தப்பட்டது.

இப் பூசை நிகழ்வினை சிறப்பிக்குமுகமாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் வே.ஜெகதீசன் , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களும் பொலிசதிகாரிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.





No comments: