Sunday, 8 September 2013

ஆலயங்களுக்கான உபகரணங்கள் வழங்கலும் திருவிழா நிகழ்வுகளும்"



ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள இந்து ஆலயங்களுக்கு சிரமதான மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கு அவசியமான உபகரணத் தொகுதிகள் வழங்கிவைத்தலும் அவ் ஆலய உற்சவங்களில் பங்கேற்கும் நிகழ்வுகளும் கடந்த 30.08.2013, வெள்ளிக்கிழமை இடம்பெற்றன.

Photo 
Photo

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வுகளில் அண்மையில் மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்ட ஆலையடிவேம்பு ஸ்ரீ முருகப்பெருமான் ஆலயம் மற்றும் தற்போது வருடாந்த உற்சவம் நடைபெறும் அக்கரைப்பற்று ஸ்ரீ மஹா பெரியதம்பிரான் ஆலயம் என்பவற்றுக்கு பிரதேச செயலாளர் அவர்களினால் உபகரணத் தொகுதிகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன் அக்கரைப்பற்று ஸ்ரீ மஹா பெரியதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவத்தின் மூன்றாம் நாள் திருவிழாவை சிறப்பிக்கும் வகையில் அன்றைய தினம் இடம்பெற்ற பால்குட பவனியில் பிரதேச செயலாளருடன் பிரதேச செயலக ஊழியர்களும் கலந்து சிறப்பித்தனர்.




No comments: